கோவை : சுற்றுச்சூழலில் ஏற்படும் மாற்றங்களை தாங்கி வளரும் ரகங்களை உருவாக்க வேண்டும் என மத்திய பருத்தி ஆராய்ச்சி நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் தலைவர் அ. ஹி. பிரகாஷ் வலியுறுத்தினர்.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் பயிர் வினையியல் துறை மற்றும் இந்திய வேளாண் ஆராய்ச்சி கூட்டமைப்பின் கீழ் இயங்கி வரும் கரும்பு இன பெருக்க மற்றும் மத்திய பருத்தி ஆராய்ச்சி நிலையம் இணைந்து இந்த தேசிய கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. 'உயிரற்ற காரணிகளால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் மேலாண்மை சவால்களும் வாய்ப்புகளும்' என்ற தலைப்பில் இன்று தொடங்கிய இந்தக் கருத்தரங்கு நாளையுடன் நிறைவடைகிறது.
கருத்தரங்கில் மத்திய பருத்தி ஆராய்ச்சி நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் தலைவர் அ. ஹி. பிரகாஷ் பேசுகையில், "சுற்றுச்சூழலில் ஏற்படும் மாற்றங்களை தாங்கி வளரும் ரகங்களை உருவாக்க வேண்டும். மரபணு மாற்றம் மற்றும் உயிரற்ற காரணிகளில் ஏற்படும் பயிர் வினையியல் மாற்றங்களைப் புரிந்து கொள்ளுதலும் இன்றியமையானவை," என்று கூறினார்.
இதைத் தொடர்ந்து, பயிர் வினையியல் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற பேராசிரியர்கள் தங்களுடைய அறிவியல் பங்களிப்புகளுக்கு கவுரவிக்கப்பட்டனர். பயிர் வினையியல் துறை சார்பில் நான்கு புத்தகங்கள் வெளியிடப்பட்டன. இதில், ஏறக்குறைய 400 விஞ்ஞானிகள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்து வருகின்றனர்.