திருப்பூர் : பல்லடம் அருகே மின்சாரம் தாக்கியதில் படுகாயம் அடைந்த ஒப்பந்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.

திருப்பூரைச் சேர்ந்த மின்சார ஒப்பந்த தொழிலாளி வீரக்குமார் (35). கடந்த 23-ம் தேதியன்று பல்லடம் அருகே வெள்ளநத்தம் கிராமத்தில் மின்கம்பத்தில் பணியாற்றிய போது மின்சாரம் தாக்கி படுகாயம் அடைந்தார். அவரை அருகில் உள்ள தனியார் மருத்துமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, அதன்பின் கோவை அரசு மருத்துமனைக்கு மேல் சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்டார். கடந்த 2 நாட்களாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், இன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனிடையே, உயிரிழந்த ஊழியரைக் காண அதிகாரிகள் யாரும் வரவில்லை என ஒப்பந்த தொழிலாளர்கள் குற்றம்சாட்டினர். அவரது இறப்புக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் தமிழ்நாடு மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.
இது குறித்து அச்சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் ராஜா ராஜேந்திரன் கூறுகையில், "இறந்த ஒப்பந்த தொழிலாளிக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். அவரது மனைவிக்கு அரசு வேலை கொடுக்க வேண்டும். ஒப்பந்த தொழிலாளர்களுக்கு அரசு அறிவித்துள்ள கருணை தொகையை அதிகாரிகள் தரவேண்டும்," என்றார்.