வழக்கு விபரங்களை தெரிந்து கொள்ள நீலகிரி நீதிமன்றத்தில் தொடுதிரை இயந்திரம் அறிமுகம்

நீலகிரி : நீலகிரி மாவட்டத்தில் உள்ள மூன்று நீதிமன்றங்களில், நிலுவையில் உள்ள வழக்குகளின் விபரங்களை அறிந்து கொள்ளும் வகையில் தொடுதிரை இயந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

நீலகிரி : நீலகிரி மாவட்டத்தில் உள்ள மூன்று நீதிமன்றங்களில், நிலுவையில் உள்ள வழக்குகளின் விபரங்களை அறிந்து கொள்ளும் வகையில் தொடுதிரை இயந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

நீலகிரியில் உள்ள மாவட்ட நீதிமன்றம், மகிளா நீதிமன்றம் மற்றும் சப்-நீதிமன்றங்களுக்கு பல்வேறு வழக்கு விசாரணைக்காக சம்மந்தப்பட்டவர்கள் வந்து செல்கின்றனர். அவர்களுக்கு வழக்கின் விபரங்களை அறிந்து கொள்வதில் சிரமம் இருந்து வந்தது. இந்நிலையில், உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் பேரில், உயர்நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி, உதகையில் உள்ள மாவட்ட நீதிமன்ற வளாகத்தில், வழக்குகளின் நிலை மற்றும் இதர தகவல்களை பொதுமக்கள் தாமாகவே அறிந்து கொள்ளும் வகையில், தொடுதிரை இயந்திர வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. 

இதனை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு சமர்ப்பிக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில், மாவட்ட நீதிபதி வடமலை கலந்து கொண்டு தொடுதிரை வசதியை தொடங்கி வைத்தார். மகிளா நீதிமன்றத்தின் நீதிபதி முரளிதரன், தொடுதிரையை இயக்கினார். 

பயன்கள் என்னென்ன..?

தொடுதிரை இயந்திரம் மூலம் வழக்குகளின் தற்போதைய நிலை, வழக்கு சம்மந்தப்பட்ட தகவல்கள், நிலுவையில் உள்ள வழக்குகள், தீர்ப்புகளை அறிந்து கொள்ள முடியும். மேலும், நீதிமன்றங்களில் குறிப்பிட்ட நாளில் விசாரணைக்கு எடுக்கப்பட உள்ள சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகளின் பட்டியல்களையும் அறிந்து கொள்ள முடியும். பொதுமக்கள், வழக்கறிர்கள் தங்கள் வழக்கின் வாய்தா மற்றும் நடப்பு தேதி நிலையை அறியலாம். 

இது குறித்து மாவட்ட நீதிபதி வடமலை கூறுகையில், ''பொதுமக்கள் அலைச்சலின்றி வழக்கு விபரங்களை இந்த தொடுதிரை மூலம் அறிந்து கொள்ளலாம். இம்மாவட்டத்தைப் பொறுத்தவரையில் மாவட்ட நீதிமன்றம், மகிளா நீதிமன்றம் மற்றும் சப்-கோர்ட் விபரங்களை தொடுதிரை மூலம் பொதுமக்கள் அறிந்து கொள்ளலாம். இங்கு விரைவில் 'வீடியோ ஸ்கிரீன்' வசதியும் ஏற்படுத்தப்படும்.

தமிழ், ஆங்கிலத்தில் வழக்கு விபரங்களை அறியும் வகையில் அமைக்கப்பட்ட இந்த தொடுதிரை இயந்திரத்தில், வழக்கு எண், சம்மந்தப்பட்ட வழக்கறிஞர் பெயர் அல்லது தானாக ஆஜராகும் நபரின் பெயர்களை தொடுதிரையில் பதிவு செய்தால், வழக்கு விபரங்களை அறிந்துகொள்ள முடியும். மற்ற நீதிமன்றங்களின் வழக்கு விபரங்களையும் தெரிந்துகொள்ளும் வசதியும் உள்ளது," என்றார் 

நீதிமன்றத்தின் இந்த முயற்சி பொதுமக்களின் மத்தியில் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது.

Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...