Exclusive: உக்கடம்-ஆத்துப்பாலம் மேம்பால பணிக்காக நிலம் கையகப்படுத்தும் பணி 70 சதவீதம் நிறைவு

கோவை: உக்கடம்-ஆத்துப்பாலம் மேம்பால பணிக்காக ஒரு ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தும் பணி 70 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக மாநில நெடுஞ்சாலைத் துறை தகவல் தெரிவித்துள்ளது.


கோவை : உக்கடம்-ஆத்துப்பாலம் மேம்பால பணிக்காக ஒரு ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தும் பணி 70 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக மாநில நெடுஞ்சாலைத் துறை தகவல் தெரிவித்துள்ளது.

கோவையில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையாக உக்கடம்-ஆத்துப்பாலம் சாலை உள்ளது. இந்த சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க ரூ.216 கோடி மதிப்பீட்டில் மேம்பாலம் கட்டும் பணி கடந்த ஏப்ரல் மாதம் 29-ம் தேதி தொடங்கியது.

1.95 கிலோ மீட்டர் தூரத்துக்கு மேம்பாலம் அமைக்கப்படுகிறது. முதற்கட்டமாக ஆத்துப்பாலம் சுங்கச்சாவடி அருகே கரும்புக்கடை பகுதியில் இருந்து தொடங்கி உக்கடம்-செல்வபுரம் புறவழிச் சாலையில் திரும்பும் வகையில் அமைக்கப்படவுள்ளது. இந்த மேம்பாலத்தில் 55 தூண்கள் அமைக்கப்படுகிறது. இதற்காக 131 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக உக்கடம் பேருந்து நிலையம் முதல் கரும்புக்கடை வரை ஒரு ஹெக்டர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இது தொடர்பாக கடந்த ஆகஸ்ட் மாதம் முதல், நில உரிமையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

இது குறித்து மாநில நெடுஞ்சாலை துறை உதவி செயற்பொறியாளர் மணிவண்ணன் கூறுகையில், "நிலம் எடுப்பது தொடர்பாக 70 சதவீதம் பணிகள் நிறைவடைந்துள்ளது. மேலும், முதற்கட்டமாக உக்கடம் பேருந்து நிலையம் முதல் கரும்புக்கடை வரை மேம்பால பணிகள் தொடங்கப்பட்டன. தற்போது கரும்புக்கடையிலிருந்து ஆத்துப்பாலம் வரையிலும் பணி தொடங்கப்பட உள்ளது." என்றார்.

ஒரு சதுர அடிக்கு ரூபாய் 1,500 (Guide line value) என்ற நில மதிப்பீடு அளவீடு செய்யப்பட்டுள்ளது. இழப்பீடு அதிலிருந்து இரண்டே கால் அளவிற்கு உயர்த்தி வழங்கப்படவுள்ளது. இழப்பீடு வழங்க ரூ 50 கோடி மாநில நெடுஞ்சாலை துறையினர் ஏற்கனவே மாவட்ட வருவாய் துறையிடம் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...