கோவையில் ஒரே நாளில் இரண்டு இடங்களில் பெண்களிடம் தங்கச் சங்கிலி பறிப்பு: மர்ம நபர்களுக்கு வலை

கோவை: கணபதி மற்றும் சூலூர் பகுதிகளில் சாலைகளில் நடந்து சென்று கொண்டிருந்த பெண்களிடமிருந்து மொத்தம் 21 பவுன் தங்க சங்கிலிகளை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

கோவை: கணபதி மற்றும் சூலூர் பகுதிகளில் சாலைகளில் நடந்து சென்று கொண்டிருந்த பெண்களிடமிருந்து மொத்தம் 21 பவுன் தங்க சங்கிலிகளை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

கணபதி வ.உ.சி நகர் இரண்டாவது வீதியில் வசித்து வருபவர் பெரியசாமி. அதே பகுதியில் மளிகைக் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி பொன்னுத்தாய் (35). இவர் நேற்று (புதன்கிழமை) இரவு 9 மணியளவில் அதே பகுதியில் உள்ள கோவிலுக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார்.

அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் பொன்னுத்தாயின் கழுத்தில் இருந்த 10 பவுன் நகையை பறித்துச் சென்றனர். இதுகுறித்து சரவணம்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து நகை பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

இதேபோல், சூலூரை அடுத்த காடம்பாடி பாரதி நகரைச் சேர்ந்தவர் கார்த்திக் (27). ஈச்சனாரி பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ரேவதி (21). இவர் சூலூர் அருகே உள்ள காங்கேயம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு டெய்லரிங் பள்ளியில் பயிற்சி பெற்று வருகிறார்.

இந்த நிலையில், இவர் நேற்று மாலை பயிற்சி முடிந்து காங்கேயம் பகுதியில் உள்ள சாலை வழியாக வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென்று எதிர்த்திசையில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் ரேவதி கழுத்தில் இருந்த 11 பவுன் தாலி செயினை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.

இதுகுறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடிவருகின்றனர். கோவையில் ஒரே நாளில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த பெண்களிடம் இருந்து தங்கச் சங்கிலிகளை பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...