மடத்துக்குளத்தில் ஒரு கண்காட்சி மருத்துவமனை?: இரவு நேரத்தில் மருத்துவர்கள் இல்லை என்று புகார்

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அரசு மருத்துவமனையானது கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் தரம் உயர்த்தப்பட்டு தாலுகா மருத்துவமனையாக மாற்றப்பட்டது.

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அரசு மருத்துவமனையானது கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் தரம் உயர்த்தப்பட்டு தாலுகா மருத்துவமனையாக மாற்றப்பட்டது.

இந்த மருத்துவமனையில் 24 மணி நேரமும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் மருத்துவர்கள் நியமிக்கப்பட்டனர். ஆனால், இரவு நேரத்தில் பணிக்கு வரவேண்டிய மருத்துவர்கள் அரசையும், பொதுமக்களையும் ஏமாற்றி பணியில் இருப்பது போல் காட்டிக் கொண்டு வீட்டிற்குச் சென்று விடுவதாக புகார் எழுந்துள்ளது. 



இதனால் இரவு நேரத்தில் அவசர சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் சிகிச்சை பெற முடியாமல் உடுமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டியுள்ளது. சரியான நேரத்தில் முதலுதவி கிடைக்காமல் சில நேரங்களில் இறப்புகளும் தொடர் கதையாக உள்ளது.

இரவு நேரத்தில் சிகிச்சைக்காக வரும் நோயாளிகளுக்கு எந்த வித சோதனைகளும் செய்யாமல் மாத்திரைகளை கொடுத்து திருப்பி அனுப்புகின்றனர் செவிலியர்கள். மருத்துவர் அறை, மருந்தகம், அவசர சிகிச்சை பிரிவு என எல்லா அறைகளும் ஊழியர்கள் இல்லாமல் இருப்பதால் இரவில் வரும் நோயாளிகள் சிகிச்சை பெறமுடியாமல் திரும்பி செல்கின்றனர்.



மருத்துவமனை திறக்கப்பட்டு விளக்குகளை எரியவிட்டு வெளியில் இருந்து பார்த்தால் மருத்துவமனை செயல்படுவது போல் கண்காட்சி நடத்தி மக்களையும் அரசை ஏமாற்றும் இது போன்ற மருத்துவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து ஏழை மக்கள் இரவு நேரத்திலும் இலவச மருத்துவம் பெற வழிவகை செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.



Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...