தூய்மை கணக்கெடுப்பு பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை : தூய்மை கணக்கெடுப்பு பணிகள்-2019 தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து அலுவலர்களுடன் கோவை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர் மரு.க.விஜயகார்த்திகேயன் கலந்தாய்வு மேற்கொண்டனர்.


கோவை : தூய்மை கணக்கெடுப்பு பணிகள்-2019 தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து அலுவலர்களுடன் கோவை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர் மரு.க.விஜயகார்த்திகேயன் கலந்தாய்வு மேற்கொண்டனர்.



இக்கூட்டத்தில் தூய்மை கணக்கெடுப்பு பணிகளை கோவை மாநகராட்சியில் ஜனவரி 4 முதல் 31 வரை அனைத்து அலுவலர்களும் துரிதமாக மேற்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது. இந்திய அளவு தரவரிசையில் கோவை மாநகராட்சி 2016-ல் 18-வது இடமும், 2018-ல் 16-வது இடமும் பிடித்துள்ள நிலையில், தரவரிசையில் மேன்மேலும் முன்னேற்றம் அடையும் வகையில் சம்மந்தப்பட்ட அலுவலர்கள் அனைவரும் துரிதமாக பணிகளை மேற்கொள்ள வேண்டும் என மாநகராட்சி ஆணையாளர் அறிவுறுத்தினர். 

மேலும், மாநகராட்சியில் குப்பைகள் சேகரிப்பு பணிகள், தூய்மைப் பணிகள், வீடு வீடாகக் குப்பை சேகரிப்பு, சுகாதாரப் பணியாளர்கள் வருகைப் பதிவேடு, வீடுகளில் மக்கும் குப்பை உரம் தயாரிக்கும் விபரங்கள், கழிப்பறைகளை தூய்மையாக பராமரித்தல் பற்றிய விபரங்கள், விழாக்காலங்களில் நடமாடும் கழிப்பறைகள் அமைத்தல், கட்டுமானப் பணிகள் நடைபெறும் இடங்களில் ஆண்கள், பெண்களுக்கென தனித்தனி கழிப்பறை வசதிகள், பிளாஸ்டிக் கழிவு மேலாண்மைப் பணிகள், பசுமை அங்காடிகளின் செயல்பாடுகள், மற்றும் சுகாதார மேம்பாட்டுப் பணிகள் போன்ற பணிகளை சம்மந்தப்பட்ட அலுவலர்கள் சிறப்பாக மேற்கொள்ள வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டது. 

இக்கூட்டத்தில் செயற்பொறியாளர் ஞானவேல், உதவி ஆணையாளர்கள் தி.ரா.ரவி, ஜே.ரவிக்குமார், செந்தில்குமார் ரத்தினம், கே.ரவிக்குமார், எஸ்.வி.குமார், நகர்நல அலுவலர் மரு.கே.சந்தோஸ்குமார், செயற்பொறியாளர் (திட்டம்) ரவிச்சந்திரன், உதவி செயற்பொறியாளர் சரவணக்குமார், மாநகராட்சி பொறியாளர்கள் மற்றும் சுகாதார அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...