சாயக்கழிவு நீரை சுத்திகரித்து பயன்படுத்துவது ஆச்சரியப்படுத்துகிறது : திருப்பூர் சாய சலவைப்பட்டறைகளை பார்வையிட்ட வெளிநாட்டினர் குழு பேட்டி

திருப்பூர் : திருப்பூரில் ஜீரோ-டிஸ்சார்ஜ் முறை சிறப்பாக செயல்படுவதாகவும், மறுசுழற்சி மூலம் சாயக்கழிவு நீரும் சுத்திகரித்து பயன்படுத்துவது ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாகவும் சாய சலவைப்பட்டறைகளை பார்வையிட்ட வெளிநாட்டினர் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

திருப்பூர் : திருப்பூரில் ஜீரோ-டிஸ்சார்ஜ் முறை சிறப்பாக செயல்படுவதாகவும், மறுசுழற்சி மூலம் சாயக்கழிவு நீரும் சுத்திகரித்து பயன்படுத்துவது ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாகவும் சாய சலவைப்பட்டறைகளை பார்வையிட்ட வெளிநாட்டினர் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

ஆஸ்திரேலியா, ஜப்பான், நியூசிலாந்து, இலங்கை மற்றும் லண்டன் உள்ளிட்ட நாடுகளிலிருந்து இந்தியாவின் பல்வேறு தொழில்களை பார்வையிட்டு இந்தியாவில் பின்பற்றப்படும் தொழில் நுட்பங்களை கற்றுக்கொள்ளும் வகையில் வெளிநாட்டவர்கள் வந்திருந்தனர்.



அதன் ஒரு பகுதியாக திருப்பூர் முருகம்பாளையம் பகுதியில் உள்ள சாய சலவை சுத்திகரிப்பு மையங்களை பார்வையிட்டனர். திருப்பூர் சாய சுத்திகரிப்பு நிலைய சங்கத்தை சேர்ந்தவர்கள் வெளிநாட்டினரை வரவேற்று திருப்பூரில் சாய சலவைப்பட்டறைகளில் பயன்படுத்தப்பட்டு வரும் ஜீரோ-டிஸ்சார்ஜ் முறையினை பற்றி விளக்கிக் கூறினர்.

அவற்றை பார்வையிட்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய வெளிநாட்டினர், "இந்தியாவில் பயன்படுத்தப்பட்டு வரும் தொழில்நுட்பங்களை கற்றுக்கொள்ள சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளோம். மற்ற நாடுகளை விட முன்னோடியாக இங்கு ஜீரோ-டிஸ்சார்ஜ் முறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. உலக நாடுகள் முழுவதும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் சூழலில் சாய தண்ணீரை மறுசுழற்சி செய்து சுத்திகரித்து மீண்டும் பயன்படுத்துவது அவசியமானதாக உள்ளது.



அந்தவகையில் திருப்பூரில் அம்முறை சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது மகிழ்ச்சியளிக்கிறது. மேலும், இம்முறையில் மின்சாரம் அதிகளவில் பயன்படுத்தப்படுவதால் அதற்கு அதிக செலவு ஏற்படும் என்பதால் அவற்றை குறைக்க ஆஸ்திரேலியாவில் பயன்படுத்தும் தொழில்நுட்பத்தை பயன்படுத்த ஆலோசனை கூறப்பட்டுள்ளது. அவை பயன்படுத்தப்படும் போது மின்சார செலவு சேமிக்கப்படும்." என்றனர்.



Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...