சாலை விபத்துக்களை தவிர்க்க உதவும் 'உயிர்' அமைப்பு : கோவையில் வரும் 27-ம் தேதி முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்

கோவை : சாலை விபத்துக்களை தவிர்க்கும் வகையிலான விழிப்புணர்வுகளை பொதுமக்களிடையே ஏற்படுத்த வரும் 27-ம் தேதி 'உயிர்' என்ற அமைப்பை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்க இருக்கிறார்.


கோவை : சாலை விபத்துக்களை தவிர்க்கும் வகையிலான விழிப்புணர்வுகளை பொதுமக்களிடையே ஏற்படுத்த வரும் 27-ம் தேதி 'உயிர்' என்ற அமைப்பை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்க இருக்கிறார்.

இந்தியாவில் அதிகம் சாலை விபத்துகள் நடைபெறும் மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது. ஆண்டுக்கு 15,000 பேர் தமிழகத்தில் சாலை விபத்துகளினால் மரணிக்கின்றனர். தமிழகத்தில் அதிகம் விபத்துகள் ஏற்படும் மாவட்டங்களில் கோவைக்கு 2-வது இடம். அதில், சாலை விதிகளை மதிக்காமல் நடந்து கொள்வதும், மிதமிஞ்சிய வேகமும் குடித்துவிட்டு வாகனங்களை ஓட்டுவதும்தான் கோவையில் நிகழும் 70 % விபத்துகளுக்கு காரணமாகும்.



இந்த நிலையில், சாலை பாதுகாப்பு விதிகளும், சாலை பொறுப்புணர்ச்சியும், போக்குவரத்து நடத்தையும் ஒரு மக்கள் இயக்கமாக மாற்றி விபத்துகளே இல்லாத கோவையை உருவாக்கும் நோக்கத்துடன் 'உயிர்' என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. கோவையின் முக்கிய பிரமுகர்கள், முதன்மையான பெருநிறுவனங்கள், தொழிலகங்கள் என பலரும் இந்த அமைப்பில் இணைந்து பணியாற்றுகின்றனர். 

இதனிடையே, கடந்த ஆகஸ்ட் மாதம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, உயிர் அறக்கட்டளையின் நிர்வாகிகள் சந்தித்து, அமைப்பின் நோக்கத்தையும், செயல்திட்டத்தையும் விளக்கினர். இதைத் தொடர்ந்து, அவர்களின் வேண்டுகோளின்படி, கோவை கொடிசியா வளாகத்தில் 27-ம் தேதி நடக்கவிருக்கும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு, 'உயிர்' அமைப்பை தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, எம்.ஆர். விஜயபாஸ்கர் உள்ளிட்ட பல்வேறு அமைச்சர்கள் பங்கேற்க இருக்கின்றன. 



தொடக்க விழாவில் உயிர் அமைப்பின் 'உயிர் காக்க புரிந்துணர்வு' ஒப்பந்தத்தில் அரசு அதிகாரிகளுடன் கையெழுத்திடும் நிகழ்வு நடைபெறுகிறது.

Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...