கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டதை எதிர்த்து சி.பி.ஐ. இயக்குநர் உச்சநீதிமன்றத்தில் மனு

கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ இயக்குநர் அலோக் வெர்மா மனு தாக்கல் செய்துள்ளார்.

கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ இயக்குநர் அலோக் வெர்மா மனு தாக்கல் செய்துள்ளார்.

கடந்த ஆண்டு சி.பி.ஐ.யின் சிறப்பு இயக்குநராக ராகேஷ் அஸ்தானாவை நியமனம் செய்ய நடவடிக்கை எடுத்த போது, அதற்கு சி.பி.ஐ. இயக்குநர் அலோக் வெர்மா எதிர்ப்பு தெரிவித்தார். அப்போதிலிருந்து இருவருக்குமான பனிப் போர் தொடங்கியது. இருவரும் மத்திய அரசிடம் பரஸ்பரக் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர். 

சி.பி.ஐ., உயர்மட்ட அதிகாரிகள் இருவர் இடையேயான இந்த மோதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவர்கள் இருவரும் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டனர். இணை இயக்குநர் நாகேஸ்வர் ராவை தற்காலிகமாக சி.பி.ஐ., இயக்குநராக நியமித்து மத்திய அரசு நள்ளிரவு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த நிலையில், கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சி.பி.ஐ. இயக்குநர் அலோக் வெர்மா மனு தாக்கல் செய்துள்ளார். அவரது மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம், வரும் 26-ம் தேதி விசாரணை நடத்தும் என தெரிகிறது. 

Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...