கோவை அரசு மருத்துவமனையில் டெங்குவிற்கு மாணவர் பலியானதாக வதந்தி : முதல்வர் அசோகன் விளக்கம்

கோவை : கோவை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மாணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டதாக வதந்தி பரப்பி வருவதாக மருத்துவமனையின் முதல்வர் அசோகன் தெரிவித்துள்ளார்.


கோவை : கோவை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மாணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டதாக வதந்தி பரப்பி வருவதாக மருத்துவமனையின் முதல்வர் அசோகன் தெரிவித்துள்ளார். 



திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள சின்னகாம் பாளையத்தைச் சேர்ந்தவர் ஆறுச்சாமி. இவரது மகன் தமிழரசன் (19) உடுமலையில் உள்ள அரசு கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவர் கடந்த சில நாட்களாகவே காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். பின்னர், அந்தப் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பின்னர் தீவிர சிகிச்சைக்காக தாராபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதனிடையே, மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த தமிழரசன், கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்து விட்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வந்தன. 

இந்த நிலையில், இந்த தகவலுக்கு கோவை அரசு மருத்துவமனையின் முதல்வர் அசோகன் மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும், அவர் கூறியதாவது :- கோவை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மாணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டதாகத் தவறான தகவல்கள் பரவி வருகின்றன. கோவை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்காக சிகிச்சை பெற்ற யாரும் இறக்கவில்லை, எனக் கூறியுள்ளார். 

Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...