சிங்காநல்லூர் குளக்கரையில் சி.சி.டி.வி காமிராக்கள்: சமூக விரோத செயல்களை தடுக்க நடவடிக்கை

கோவை: சமூக விரோத செயல்களை தடுக்கும் பொருட்டு சிங்காநல்லூர் குளக்கரையில் நான்கு சி.சி.டி.வி காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

கோவை: சமூக விரோத செயல்களை தடுக்கும் பொருட்டு சிங்காநல்லூர் குளக்கரையில் நான்கு சி.சி.டி.வி காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.



சிங்காநல்லூர் குளக்கரையில் சூழலியலை காக்கும் பொருட்டும், சமூக விரோத செயல்களை தடுக்கும் விதமாகவும், வேட்டைகளை தடுக்கவும் நான்கு சி.சி.டி.வி காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இதில் இரண்டு காமிராக்கள் குளக்கரை அருகே உள்ள சோதனைச் சாவடியிலும், இரண்டு காமிராக்கள் குளக்கரையின் ஓரத்திலும் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கான கட்டுப்பட்டு அறையும் அங்கேயே அமைக்கப்பட்டுள்ளது. கட்டுப்பட்டு அறையினுள் இருக்கும் டி.வி-யின் மூலம் காமிராவில் பதிவாகும் காட்சிகளை காண முடியும். 



இது குறித்து கியூப் அமைப்பின் தன்னார்வலர்கள் கூறுகையில், "குளத்தின் இயற்கை சூழலை பாதுகாக்க தொடர்ந்து கண்காணிக்க மாநகராட்சியுடன் இணைந்து இந்த காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. குளத்தின் கரையில் ஓரத்தில் நடைபெறும் சமூக விரோத செயல்களை கட்டுப்படுத்த இது உதவும்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக குளத்தில் தேங்கும் மது பாட்டில்களை தன்னார்வலர்கள் அகற்றி வருகின்றனர். ஆனால், மது அருந்துபவர்களையும், பறவைகளை வேட்டையாடுபவர்களையும் எதுவும் செய்ய இயலவில்லை. இதனால் குளத்தின் பாதுகாப்பு குறித்து கேள்விக்குறி எழுந்தது. தற்போது மொத்த குளமும் கண்காணிப்பில் உள்ளது." என்றனர்.

கோவையில் முதன்முறையாக சி.சி.டி.வி காமிரா நிறுவப்பட்ட குளம் இதுவே என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...