கோவை மாநகராட்சி சார்பில் மின்னணு பணப்பரிவர்த்தனை மேளா பற்றிய விழிப்புணர்வு பயிற்சி வகுப்பு

கோவை : தமிழ்நாடு தொலைத் தொடர்பு துறை மற்றும் கோவை மாநகராட்சி சார்பில் மின்னணு பணப்பரிவர்த்தனை மேளா பற்றிய விழிப்புணர்வு பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

கோவை : தமிழ்நாடு தொலைத் தொடர்பு துறை மற்றும் கோவை மாநகராட்சி சார்பில் மின்னணு பணப்பரிவர்த்தனை மேளா பற்றிய விழிப்புணர்வு பயிற்சி வகுப்பு நடைபெற்றது. 

மின்னணு பணப்பரிவர்த்தனை மேளா பற்றிய விழிப்புணர்வு பயிற்சியினை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர் மரு.க.விஜயகார்த்திகேயன் தலைமை வகித்து தொடங்கி வைத்தார். பின்னர், அவர் பேசியதாவது :- கோவை மாநகராட்சியில் இணையதளத்தின் வாயிலாக மின்னணு பணப்பரிவர்த்தனைகள் செயல்படுத்திட பல்வேறு வழிமுறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் மூலமாக மின்னணு பணப்பரிவர்த்தனைகளை மக்களிடையே கொண்டு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் மூலம் எளிய முறையில் மாநகராட்சியின் வருவாய் உயர்வதற்கு வழிவகுக்கும், இவ்வாறு அவர் கூறினார். 

இந்நிகழ்ச்சியில், தொலைத்தொடர்பு நிறுவனங்களின் சில்லறை விற்பனையாளர்கள், வங்கி அலுவலர்கள் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை வழங்கினர். மேலும், மின்னணு பணப்பரிவர்த்தனை முறைகள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு, மின்னணு பணப்பரிவர்த்தனையின் நன்மைகள் மற்றும் பயன்படுத்தும் வழிமுறைகள் குறித்தும் இப்பயிற்சி வகுப்பில் விளக்கப்பட்டது. கனரா வங்கியின் சார்பாகஎஸ்.வெங்கட்ராமன், இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கி மேலாளர் சத்யபிரபு, முருகன் என்.பி.சி.ஐ., சரக்கு மற்றும் சேவை வரி ஆலோசகர்கள் ஏ.திருமூர்த்தி, சங்கரநாராயணன் ஆகியோரும் இதில் கலந்து கொண்டனர்.

Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...