திருப்பூரில் நீதிபதியை அவமதித்த காவல் துணை கண்காணிப்பாளருக்கு ஒருநாள் நீதிமன்றக்காவல்

திருப்பூர் : திருப்பூரில் நீதிமன்றத்தையும், நீதிபதியையும் அவமதித்தாகக் கூறி மாவட்ட காவல் துணைக் கண்காணிப்பாளருக்கு ஒருநாள் நீதிமன்றக்காவல் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் : திருப்பூரில் நீதிமன்றத்தையும், நீதிபதியையும் அவமதித்தாகக் கூறி மாவட்ட காவல் துணைக் கண்காணிப்பாளருக்கு ஒருநாள் நீதிமன்றக்காவல் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் காவல் துணைக்கண்காணிப்பாளராக இருப்பவர் பரமசாமி. இவர், கடந்த 9-ம் தேதி வழக்கு ஒன்றிற்காக அரசு தரப்பு சாட்சியாக ஆஜராகியுள்ளார். அப்போது, ஆவணங்களில் உள்ள குறைபாடுகள் குறித்து நீதிபதி கேட்ட போது, நீதிபதியையும், நீதிமன்றத்தையும் அவமதிக்கும் வகையில் பேசியதாகவும், அதனை திருத்திக்கொள்ள அரசு தரப்பு வழக்கறிஞர் குறுக்கிட்டபோது அவரையும் தரக்குறைவாக பேசியதாகக் கூறப்படுகிறது. 



நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில், செயல்பட்டதற்கான விளக்கத்தை இன்றைய தினம் துணைக்கண்காணிப்பாளர் பரமசாமி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டிருந்தார். 



அதனடிப்படையில், நேரில் ஆஜரான அவரை இன்றைய தினம் முழுவதும் நீதிமன்ற காவலில் இருக்கும்படி மாவட்ட முதன்மை நீதிபதி உத்தரவிட்டார். இதனையடுத்து, இன்றைய தினம் முழுவதும் நீதிமன்றத்திலேயே காத்திருந்த துணைக்கண்காணிப்பாளர் நீதிமன்ற அலுவல் நேரம் முடிந்த பின்பே சென்றார். மாவட்ட காவல் துணைக்கண்காணிப்பாளர் ஒருவரே நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் செயல்பட்டதற்காக ஒரு நாள் நீதிமன்றக்காவல் தண்டனை பெற்ற சம்பவம் போலீசார் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...