நீலகிரி : நீலகிரி மாவட்டத்தில் அரசு நிலத்தை ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட 'அக்கார்டு' தொண்டு நிறுவனத்திற்கு சொந்தமான சொகுசு விடுதிக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

கூடலூர் அருகே உள்ள தேவாலா பகுதியில் 'அக்கார்டு' என்ற தொண்டு நிறுவனம் கடந்த பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் உரிய அனுமதி பெறாமல் அரசு நிலத்தை ஆக்கிரமித்து சொகுசு பங்களா கட்டி வருவதாக நெல்லியாளம் நகராட்சிக்கு புகார்கள் வந்தன. இதனைத் தொடர்ந்து, அங்கு கட்டப்பட்ட சொகுசு விடுதிக்கு நெல்லியாளம் நகராட்சி அதிகாரிகள் அதிரடியாக சீல் வைத்தனர்.
ஏற்கனவே, சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி அதே நிறுவனத்தால் ஆக்கிரமிப்பில் இருந்த 50 ஏக்கர் வனப்பகுதியை வனத்துறையினர் மீட்டது குறிப்பிடத்தக்கது.