அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி வகுப்புகளுக்கான பணிகள் நவம்பரில் தொடங்கும் - அமைச்சர் செங்கோட்டையன்

ஈரோடு: அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி வகுப்புகள் தொடங்குவதற்கான பணிகள் அடுத்த மாதம் தொடங்கும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.


ஈரோடு: அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி வகுப்புகள் தொடங்குவதற்கான பணிகள் அடுத்த மாதம் தொடங்கும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார். 

ஈரோடு மாவட்டம் சென்னிமலை பகுதியில் நடந்த ஒரு விழாவில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டார். அப்போது நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது:-

வருகிற ஜனவரி மாதத்தில் இருந்து பாலித்தீன் பயன்பாடு இல்லாத மாநிலமாக தமிழகம் மாறும். இதற்கான நடவடிக்கையை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் எடுத்து வருகிறார். விஜயதசமியை முன்னிட்டு எல்.கே.ஜி. வகுப்புகள் தொடங்கப்பட்ட அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்றது. சேர்க்கை எண்ணிக்கை பற்றிய விவரங்கள் இன்னும் முழுமையாக கிடைக்கவில்லை.

கிராமப்புறங்களில் உள்ள மக்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, ஏழை-எளிய மக்களுக்காகத்தான் பள்ளிக்கல்வித்துறை இயங்கிக்கொண்டு இருக்கிறது. வசதி படைத்தவர்கள் தனியார் பள்ளிகளுக்குத்தான் செல்கிறார்கள். பொதுமக்களை பொறுத்தவரையில் தங்கள் குழந்தைகள் அனைவரும் ஆங்கிலம் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற மோகம் இருக்கிறது.

இதுதொடர்பாக சமூக நலத்துறை அமைச்சருடன் திங்கட்கிழமை பேச்சுவார்த்தை நடத்த முதல்-அமைச்சர் உத்தரவிட்டு உள்ளார். அதைத்தொடர்ந்து தமிழக அங்கன்வாடிகளில் படிக்கும் 1 லட்சம் மாணவ-மாணவிகள் அடுத்த ஆண்டு அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளில் சேர்ப்பதற்கான பணிகள் அடுத்த மாதம் தொடங்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.  

இதுகுறித்து, நல்லாசிரியர் விருது பெற்ற மலுமிச்சம்பட்டி அரசு பள்ளியின் தலைமையாசிரியர் ஷதி கூறுகையில், "கோவையில் மலுமிச்சம்பட்டி பகுதியில் உள்ள அரசு பள்ளியில் முதலில் எல்.கே.ஜி., யு.கே.ஜி வகுப்புகள் தொடங்க இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. எங்களது பகுதிகளுக்கு உட்பட்ட பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை எல்.கே.ஜி., யு.கே.ஜி வகுப்புகளில் சேர்க்க ஆர்வமாக உள்ளனர். இது தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் பேசியுள்ளேன்." என்றார்.

Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...