கோவை: கோவை அரசு கலைக் கல்லூரியில் பயிலும் மாணவி மாலதி கடந்த மாதம் 28-ம் தேதி கல்லூரி மைதானத்தில் மாணவ-மாணவிகளுடன் இணைந்து பகத்சிங் பிறந்தநாள் கொண்டாடியதற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
கோவை : கோவை அரசு கலைக் கல்லூரியில் பயிலும் மாணவி மாலதி கடந்த மாதம் 28-ம் தேதி கல்லூரி மைதானத்தில் மாணவ-மாணவிகளுடன் இணைந்து பகத்சிங் பிறந்தநாள் கொண்டாடியதற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இந்த கூட்டம் குறித்து ஏற்கனவே முதல்வரிடம் அனுமதி கேட்டு கல்லூரி முதல்வர் அனுமதிக்காத நிலையில், பிற மாணவர்கள்-மாணவிகளை அழைத்து கூட்டம் கூட்டி கல்லூரி பொது அமைதிக்கு இடையூறு ஏற்படுத்தும் ஒழுங்கீனமாகவும் நடந்து கொண்டதாகவும், மாணவி மாலதியை 1-ம் தேதி முதல் கல்லூரியில் இருந்து விசாரணை அறிக்கை பெறும்வரை இடைநீக்கம் செய்யப்படுகிறார் என்றும் கல்லூரி நிர்வாகம் அறிவித்திருந்தது.
இந்த சூழலில், ஞாயிறன்று விசாரணை நடைபெற்றது. விசாரணைக்குப் பிறகு, தான் சஸ்பெண்ட் செய்யப்பட்டது திரும்பப்பெறப்படலாம் என்றும், இன்று நடைபெற்ற விசாரணையில் கேள்விகளுக்கு பதில் அளித்திருப்பதாகவும் மாலதி தெரிவித்தார்.