நீலகிரி: நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள தேவர்சோலை பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நூறு சதவீதத்திற்கு மேல் சொத்துவரி, வீட்டுவரி உயர்த்தப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து அனைத்துக் கட்சிகள் மற்றும் விவசாய பிரதிநிதிகள் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நீலகிரி : நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள தேவர்சோலை பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நூறு சதவீதத்திற்கு மேல் சொத்துவரி, வீட்டுவரி உயர்த்தப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து அனைத்துக் கட்சிகள் மற்றும் விவசாய பிரதிநிதிகள் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நீலகிரி மாவட்டம் கூடலூரில் உள்ள தேவர்சோலை பேரூராட்சியில் சொத்துவரி, வீட்டுவரி கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளதாக கூறியும், 1,500 சதுர அடி கொண்ட கட்டிட அனுமதிக்கான முடிவை பேரூராட்சி நிர்வாகம் முடிவெடுக்க வேண்டும், குடிசைப்பகுதி வீடுகளுக்கு கதவு எண் வழங்க வேண்டும் மற்றும் அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரியும் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க., காங்கிரஸ், தே.மு.தி.க., கம்யூனிஸ்டு கட்சி, விவசாய சங்கங்கள், ஆட்டோ-கார் ஓட்டுநர் சங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பேரூராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டத்தை தீவிரப்படுத்த உள்ளதாக இப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.