கோவை: கோவிலுக்குள் நுழைய பெண்களுக்கு சம உரிமை வழங்கக்கோரி நீதிமன்றத்தில் ஆஜராக வந்த மாவோயிஸ்ட்டுகள் கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை : கோவிலுக்குள் நுழைய பெண்களுக்கு சம உரிமை வழங்கக்கோரி நீதிமன்றத்தில் ஆஜராக வந்த மாவோயிஸ்ட்டுகள் கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை அருகே கருமத்தம்பட்டியில் கடந்த 2015-ம் ஆண்டு மாவோயிஸ்ட் தலைவர் ரூபேஸ், அவரது மனைவி சைனா மற்றும் மாவோயிஸ்ட்டுகள் கண்ணன், அனூப், வீரமணி ஆகிய 5 பேரை கியூ பிராஞ்ச் போலீசார் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
இதனையடுத்து ரூபேஸ் மீது கேரளாவில் பல வழக்குகள் உள்ளதால், திருச்சூர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில், சைனாவிற்கு சில மாதங்களுக்கு முன் நிபந்தனை ஜாமீன் கிடைத்தது. இந்த வழக்கு விசாரணை கோவை 3-வது கூடுதல் குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது.

இதில் வழக்கை விசாரித்த நீதிபதி வரும் 13-ம் தேதி மீண்டும் தமிழக மற்றும் கேரளா காவல் துறைக்கு ஆஜர்படுத்த உத்தரவிட்டார். இந்நிலையில், நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்த மாவோயிஸ்ட்டுகள் அனூப், கண்ணன், வீரமணி ஆகியோர், "கோவிலில் நுழைய பெண்களுக்கு சம உரிமைக்காக போராடுவோம், போராடுவோம்" என கோஷமிட்டு சென்றனர்.
இதனால் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.