கோவை: பீளமேடு பகுதியில் சப்வே அமைக்காத ரயில்வே நிர்வாகம் மற்றும் நெடுஞ்சாலை துறையை கண்டித்து வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டம் நடத்தப்படும் என்றும், 25-ம் தேதி வடக்கு மண்டல மாநகராட்சியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்றும் அப்பகுதி பொது நல அமைப்புகள் அறிவித்துள்ளன.
கோவை : பீளமேடு பகுதியில் சப்வே அமைக்காத ரயில்வே நிர்வாகம் மற்றும் நெடுஞ்சாலை துறையை கண்டித்து வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டம் நடத்தப்படும் என்றும், 25-ம் தேதி வடக்கு மண்டல மாநகராட்சியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்றும் அப்பகுதி பொது நல அமைப்புகள் அறிவித்துள்ளன.
பீளமேடு பகுதியில் கடந்த 2011-ம் ஆண்டு தொடங்கப்பட்ட ரயில்வே மேம்பால பணிகள் நிறைவடைந்து, கடந்த ஆண்டு டிசம்பர் 3-ம் தேதி பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது. இந்த மேம்பாலத்தில் ரயில்வே தண்டவாளத்தை கடக்க சுரங்க பாதை அமைக்கப்படுமென சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்திருந்தது.

இருந்தபோதும், இதற்கான பணிகள் இன்னும் துவக்கப்படவில்லை. இதனைக் கண்டித்து வரும் 23-ம் தேதி வீடுகளில் கருப்பு கொடியேற்றி அறப்போர் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும், மேலும் பிரதான சாலையான விளாங்குறிச்சி சாலை, எல்லைதோட்ட சாலைகளில் இரண்டு ஆண்டுகளுக்கு முன் தோண்டப்பட்ட பாதாள சாக்கடை பணி முடிக்காததைக் கண்டித்து 25-ம் தேதி கோவை வடக்கு மண்டல மாநகராட்சியைக் கண்டித்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்து தி.மு.க., ம.தி.மு.க., காங்கிரஸ், கன்ஸ்யூமர் வாய்ஸ் அமைப்பினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.