கோவை : தசராவின் சாராம்சம் நாட்டினுடைய ஒவ்வொரு பகுதியிலும் காணப்படுகிறது. ஒவ்வொரு பகுதியிலும் காரணங்களும், கடவுளும் வேறுபட்டு இருந்தாலும் ஊரே திருவிழாக்கோலம் பூண்டுள்ளது.

கோவையில் பல்வேறு கலாச்சாரத்தை சேர்ந்த மக்களும் வாழ்ந்து வருகின்றனர். அதன்படி, தசராவையும் வரவேற்று நிற்கிறது கோவை. இது குறித்து கோயம்புத்தூர் பெங்காலி சங்கத்தின் செயலாளர் ஸ்வரூப் குமார் சட்டோபத்யை நம்மிடம் கூறுகையில், "பெங்காலி மக்களிடையே தஸசரா விழா துர்கா பூஜா என்றழைக்கப்படுகிறது. இந்த பத்து நாள் பூஜை காலம் பெங்காலில் மிகவும் புகழ்பெற்ற திருவிழா.

இது முழு குடும்பத்திற்கும் புதிய ஆடைகள் மற்றும் பிற பரிசுகளை வாங்குவதற்கான ஒரு சந்தர்ப்பமாகும். துர்கா சிலைகளை பல்வேறு வடிவங்களில் காணலாம்.
பல்வேறு பாணிகளில் இசை, நடனம் மற்றும் பூஜைகள் என்று பக்தி மயமான கொண்டாட்ட நிகழ்வாகும். நவராத்திரியின் பத்தாவது நாள் முடிவில் சிலைகளுக்கு பூஜைகள் செய்யப்பட்டு குளங்கள் அல்லது ஆறுகளில் கரைக்கப்படும். இமயமலையில் தனது கணவரின் வீட்டிற்குத் தெய்வம் புறப்படுவதற்கு அடையாளமாக அந்த நீரை பாவித்துக்கொள்வோம். தொடர்ந்து, பியோஜா என்ற முறைப்படி சொந்தங்கள் வீட்டிற்கு சென்று இனிப்புகளை பகிர்ந்து கொள்வோம்." என்றார்.
தனது குடும்பத்தில் 85-க்கும் மேற்பட்ட உறுப்பினர்களை கொண்ட இவர் துர்கா பூஜையின் போது 2000-க்கும் மேற்பட்டோருக்கு உணவளிக்கிறார்.