திருப்பூர்: திருப்பூரில் சீரமைப்பு பணிக்காக உடைக்கப்பட்ட பாலத்தை பல மாதமாகியும் கட்டித்தராத மாநகராட்சியை கண்டித்து பொதுமக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்
திருப்பூர் : திருப்பூரில் சீரமைப்பு பணிக்காக உடைக்கப்பட்ட பாலத்தை பல மாதமாகியும் கட்டித்தராத மாநகராட்சியை கண்டித்து பொதுமக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் .

திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட 41-வது வார்டு குறிஞ்சி நகர் பகுதியில் 200-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன் குறிஞ்சி நகர் பகுதியையும், தாராபுரம் சாலையையும் இணைக்கும் சிறிய பாலத்தை சாக்கடை கால்வாய் விரிவாக்கப்பணிக்காக மாநகராட்சி அகற்றி சாக்கடை கால்வாய் பணியை மேற்கொண்டது.

இதனால் அப்பகுதி மக்கள் தாராபுரம் சாலைக்கு வர 2 கி.மீ தூரம் சுற்றி வர வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால், சாக்கடை கால்வாய் பணி முடிக்கப்பட்டு 3 மாதங்களாகியும் இன்னும் பாலத்தை கட்டிக்கொடுக்கவில்லை எனவும், இது குறித்து மாநகராட்சி நிர்வாகம், மாவட்ட ஆட்சியர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டிய பொதுமக்கள் திருப்பூர்-தாராபுரம் சாலையில் இன்று திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை மாநகராட்சி அதிகாரிகளை வரவழைப்பதாக தெரிவித்ததையடுத்து கலைந்து சென்றனர்.