நீலகிரி: நீலகிரியில் உள்ள கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளில், விவசாயிகளுக்கான 'செட்டில்மென்ட்' தொகை மாதக்கணக்கில் இழுத்தடிக்கப்பட்டு வருவதால், உறுப்பினர்கள் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளதாக விவசாயிகள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
நீலகிரி : நீலகிரியில் உள்ள கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளில், விவசாயிகளுக்கான 'செட்டில்மென்ட்' தொகை மாதக்கணக்கில் இழுத்தடிக்கப்பட்டு வருவதால், உறுப்பினர்கள் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளதாக விவசாயிகள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
நீலகிரியில் உள்ள, 16 கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளில், 30 ஆயிரம் சிறு விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்கள் தங்களது தேயிலை தோட்டத்தில் பறிக்கும் பசுந்தேயிலையை, கூட்டுறவு தொழிற்சாலைகளுக்கு விநியோகித்து வருகின்றனர்.

ஆனால், பசுந்தேயிலைக்கான விலையேற்றத்தில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதனால் சிறு விவசாயிகள் குறைந்த அளவிலான விலையை பெற்றுக்கொண்டு, தோட்ட பராமரிப்பு, கூலி போன்ற பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்ள முடியாமல் திணறி வருகின்றனர்.
தேயிலை வாரியம் அறிவித்த குறைந்தபட்ச விலை நிர்ணயமான, கிலோவுக்கு 14.50 ரூபாயும், உறுப்பினர்களுக்கு முறையாக வழங்காததால், சுமார், 37 கோடி ரூபாய் கடந்த ஒரு ஆண்டாக நிலுவையில் உள்ளது.
இவர்களுக்கு, ஜூன் மாதத்திலிருந்து செப்டம்பர் மாதம் வரை விநியோகித்த பசுந்தேயிலைக்கு குறைந்த அளவிலான முன் பணம் தொகை மட்டும் வழங்கப்பட்டுள்ளது.
நான்கு மாதங்களாக விவசாயிகளுக்கான 'செட்டில்மென்ட்' தொகைமட்டும் 1.50 கோடி ரூபாய் நிலுவையில் உள்ளது. தற்போது, தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் வேளையில் செட்டில்மென்ட் தொகை கிடைப்பதில் ஏற்படும் தாமதத்தால் அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்ற முடியாமல் உறுப்பினர்களுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பெரும்பாலான உறுப்பினர்கள் இலைகளை தனியார் தொழிற்சாலைக்கு வினியோகிப்பதால், கூட்டுறவு தொழிற்சாலைக்கு தேயிலை வரத்து குறைந்துள்ளது.
இதுகுறித்து நெலிகோலு குறு-சிறு தேயிலை விவசாயிகள் சங்கம் சார்பில் இன்ட்கோ நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்துள்ளனர்.