மருத்துவர்கள் உடல் உறுப்புகளை திருடுபவர்கள் அல்ல : கோவையில் சுகி சிவம் பேச்சு

கோவை: ஊடகங்கள் மற்றும் சினிமா துறையில் மருத்துவர்கள் உடல் உறுப்புகளை திருடுபவர்களாக சித்தரிக்கப்பட்டு வரும் சூழலில், உறுப்பு தானம் அரசின் ஒப்புதல் இல்லாமல் செய்யப்பட முடியாது என்று மேடை பேச்சாளர் சுகி சிவம் தெரிவித்துள்ளார்.


கோவை : ஊடகங்கள் மற்றும் சினிமா துறையில் மருத்துவர்கள் உடல் உறுப்புகளை திருடுபவர்களாக சித்தரிக்கப்பட்டு வரும் சூழலில், உறுப்பு தானம் அரசின் ஒப்புதல் இல்லாமல் செய்யப்பட முடியாது என்று மேடை பேச்சாளர் சுகி சிவம் தெரிவித்துள்ளார்.



இந்திய தொழில் வர்த்தக சபை மற்றும் எங் இந்தியன் அமைப்பு சார்பில், உடல் உறுப்பு தானம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி 'கொடுத்ததெல்லாம் கொடுத்தான்' என்ற தலைப்பில் கோவையில் உள்ள கிக்காணி பள்ளியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது.



இதில் மேடை பேச்சாளர் சுகி சிவம் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், "மருத்துவர்கள் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டே உடல் உறுப்பு தானங்களை பெற்று அதனை மற்றவர்களுக்கு பொருத்துகின்றனர். இன்றைய கால கட்டத்தில் திரைப்படங்களில் தவறாக சித்தரிக்கப்படுகிறது.

பேராசிரியர்களும் முட்டாள்களாக சித்தரிக்கப்படுகின்றனர். மருத்துவர்கள் கடவுள் நமக்கு கொடுத்த வரம். அவர்கள் உடல் உறுப்புகளை திருடுபவர்கள் அல்ல.." என்றார்.



முன்னதாக மருத்துவர் ரமணி கோவை மண்டலத்தில் உடல் உறுப்பு தானம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விழிப்புணர்வு நடவடிக்கைகளை விளக்கினார். மேலும், உடல் உறுப்பு தானம் பல உயிர்களை காக்கும் என்றார்.

இந்த நிகழ்ச்சியில், பல்வேறு மருத்துவமனையின் மருத்துவர்கள், இந்திய தொழில் வர்த்தக சபை மற்றும் எங் இந்தியன் அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...