6 ஆண்டுகளுக்குப் பிறகு கோவையில் அரிய வகை பறவை : ஆர்வத்துடன் கண்டுகளித்த மாணவர்கள்

கோவை : கோவையில் 6 ஆண்டுகளுக்குப் பிறகு அரிய வகை இனத்தைச் சேர்ந்த யூரேசியன் ஹாபி பறவையைப் பள்ளி மாணவர்கள் மகிழ்ச்சியுடன் கண்டுகளித்தனர்.

கோவை : கோவையில் 6 ஆண்டுகளுக்குப் பிறகு அரிய வகை இனத்தைச் சேர்ந்த யூரேசியன் ஹாபி பறவையைப் பள்ளி மாணவர்கள் மகிழ்ச்சியுடன் கண்டுகளித்தனர். 

கோவை மாவட்டத்தைச் சேர்ந்த 11 முதல் 13 வயதுடைய பள்ளி மாணவர்களுக்கு கெனாஃபி இயற்கை அகாடமியின் சார்பில் இளநிலை சுற்றுச்சூழல் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பறவைகளை காணும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில், உக்கடம் குளத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சியில் ஏராளமான குழந்தைகள் கலந்து கொண்டு பலவிதமான பறவை இனங்களை மாணவ, மாணவிகள் கண்டு ரசித்தனர். குறிப்பாக, 6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தக் குளத்திற்கு வருகை புரிந்திருந்த 'யூரேசியன் ஹாபி' என்ற அரிய வகை இனத்தை அவர்கள் ஆர்வத்துடன் பார்த்து மகிழ்ந்தனர். 2012 ஆம் ஆண்டிற்கு பிறகு இந்தப் பறவை கோவைக்கு வந்திருப்பது முதல்முறையாகும். 



மாணவர்களுடன் கெனாஃபி இயற்கை அகாடமியைச் சேர்ந்த சரவணன் சந்திரசேகர் பறவை இனங்கள் குறித்து விளக்களித்தார். "நரேன் சூர்யா, பிரார்த்தனா, பிரதிக்ஷா மற்றும் நிதின் ஆகியோர் இந்தக் குளக்கரையில் இருந்த அழகிய பலவிதமான பறவைகளை கண்டு ரசித்தனர். இவர்கள் தொடர்ச்சியாக பறவை இனங்களை காண வருபவர்களாவர். நாள்தோறும் பார்க்கும் பறவை இனங்களை காட்டிலும், அரிய வகை இனங்களை கண்டு ரசிக்கும் போது, அவர்கள் மகிழ்ச்சியடைகின்றனர்," என்கிறார் சி.என்.ஏ.,வைச் சேர்ந்த சரவணன் சந்திரசேகர்.

உக்கடம் குளப்பகுதியில் இந்தியன் கிரே ஹாம்பில், ஆசியன் பாரடைஸ் ப்ளைகேட்சர் மற்றும் கிங்பிஷர் உள்ளிட்ட அன்றாட பறவை இனங்கள் வந்து செல்கின்றன. இங்குள்ள ஒரே மாதிரியான உருவம், நிறம் போன்றவற்றைக் கொண்ட பறவைகளை வகைப்படுத்திக் காண்பது என்பது மாணவர்களால் முடியாத ஒன்றாகும். அனுபவம் மிகுந்தவர்களால் மட்டுமே அதனை வகைப்படுத்தி, பறவையின் இனத்தின் பெயரை மாணவர்களுக்குத் தெரியப்படுத்த முடியும்.

"பெரிகிரின் ஃபெல்கான், அமுல் பெல்கான் மற்றும் யூரேசியன் ஹாபி ஆகிய பறவைகளை வேறுபடுத்தி அடையாளம் காண்பது மிகவும் கடினமானது. ஏனெனில் அவை அனைத்தும் ஒரே மாதிரியான உருவத்தைக் கொண்டவை," என்றார் சரவணன் சந்திரசேகர்.

பெரும்பாலும், ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் தான் ஐரோப்பாவில் இருந்து பறவைகள் பிறப் பகுதிகளுக்குச் செல்லும். சில சமயங்களில், சற்று தாமதமாக அக்டோபர் மாதத்தில் இருப்பிடத்தை வெளியேறுகின்றன. இந்த நேரங்களில் ஆப்ரிக்கா மற்றும் வட இந்தியாக்களில் நிலவும் குளிர்காலநிலைவயை அனுபவித்துவிட்டு, தென் இந்தியா வழியாக மீண்டும் ஏப்ரல் மாதத்திற்குள் ஐரோப்பாவிற்கே திரும்பி விடுகின்றன. 

"நகர்புறப் புறத்தில் இருக்கும் குளங்களில், உக்கடம் குளம் முக்கியமானதாகும். உயரமாக பறந்து செல்லும் போது பறவைகள் இந்தக் குளத்தினை தேர்வு செய்கின்றன. இதன்மூலம், குளத்தின் சுற்றுச்சூழல் பாதுகாப்பின் முக்கியத்துவம் உணர்த்தப்படுகிறது," இவ்வாறு கூறினார் சரவணன் சந்திரசேகர்.

Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...