இந்தாண்டு 1,000 மி.மீ. மழை அளவு பெய்ய வாய்ப்புள்ளது : தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம்

கோவை : வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சூழ்நிலை உருவாகியுள்ள நிலையில், அக்டோபர் மாதம் கிடைக்க வேண்டிய மழையின் அளவு தற்போதே கிடைத்துவிட்டதாக தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழகத்தின் வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம் தலைவர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.


கோவை : வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சூழ்நிலை உருவாகியுள்ள நிலையில், அக்டோபர் மாதம் கிடைக்க வேண்டிய மழையின் அளவு தற்போதே கிடைத்துவிட்டதாக தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழகத்தின் வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம் தலைவர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.



இது குறித்து அவர் நம்மிடம் கூறுகையில், "கோவையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது. வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். இதனிடையே, பகல்நேர வெப்ப நிலையானது 29 முதல் 30 டிகிரி செல்சியஸ்யாகவும், இரவுநேர வெப்பநிலை 22 முதல் 22.5 டிகிரி செல்சியாகவும் நிலவ வாய்ப்புள்ளது. கோவையைப் பொறுத்தவரையில் 5 முதல் 6 கிலோ மீட்டர் வரை மட்டுமே காற்றின் வேகம் வீச வாய்ப்புள்ளது. இதனால், மழையானது நிதானமாகப் பெய்ய வாய்ப்புள்ளது. 

பொதுவாக, அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் 328 மி.மீ. மழை பெய்யக் கூடும். இந்த வருடம் 363 மி.மீ. மழை பெய்ய வாய்ப்புள்ளது. அக்டோபர் மாதம் 146 மி.மீ. மழை எதிர்பார்த்த நிலையில் 136 மி.மீ. தற்போது கிடைத்துவிட்டது. கோவையைப் பொறுத்தவரையில் ஆண்டுக்கு 46 மழை பொழிவு கிடைக்கும். ஆனால், இந்தாண்டு மூன்று மாதங்கள் மிதம் இருக்கும் நிலையில், தற்போது 56 மி.மீ. மழை பொழிவு கிடைத்துள்ளது. ஆண்டு மழை 674 மி.மீ. எதிர்பார்த்த நிலையில், தற்போது 764 மி.மீ. கிடைத்துள்ளது. இது தொடர்ந்தால் 1,000 மி.மீ. கிடைக்க வாய்ப்புள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான எல்லா சூழ்நிலைகளும் உருவாகியுள்ளன," என்றார்.

Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...