பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தை உள்பட இருவருக்கு கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

கோவை: கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தை உள்பட 2 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


கோவை: கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தை உள்பட 2 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.



கோவையில் கடந்த ஆண்டு பன்றிக்காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகமாக இருந்தது. இதனால், கோவை அரசு மருத்துவமனையில் ஏராளமானவர்கள் சிகிச்சை பெற்று வந்தனர். கடந்த சில மாதங்களாக அதன் தாக்கம் குறைந்த நிலையில், தற்போது பன்றிக் காய்ச்சல் மீண்டும் வேகமாக பரவி வருகிறது. கோவை அரசு மருத்துவமனையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவை மாநகர பகுதியைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவரும், முருகன் (50) என்பவரும் அனுமதிக்கப்பட்டனர். பின்னர், அதில் 19 வயது இளம்பெண் காய்ச்சல் சரி ஆகி வீடு திரும்பினார். ஆனால், முருகன் சிகிச்சை பலனின்றி பலியானார். இந்த தகவல் மருத்துவமனை நிர்வாகத்தால் மறைக்கப்பட்டது.

அதேபோல, கூடலூரில் வட்டாட்சியராக இருந்த ரகுமான் என்பவரும் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த நிலையில், பன்றிகாய்ச்சல் பாதிப்பில் நேற்று கரூரைச் சேர்ந்த (அசோக்குமார்) 69 வயதான முதியவரையும் மற்றும் ஈரோட்டை சேர்ந்த 2 வயது குழந்தையையும் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்து உள்ளனர். இவர்களுக்கு தனிமை சிறப்பு வார்டில் வைத்து தீவிர சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது. அதேபோல, சாதாரண வைரஸ் காய்ச்சல் தொற்றியும் 19 பேர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...