பொள்ளாச்சியில் மீண்டும் தலைதூக்கும் இந்தி எதிர்ப்பு : சமூக ஆர்வலரின் தனிப்பட்ட முயற்சிக்கு குவியும் பாராட்டுக்கள்

கோவை : பொள்ளாச்சி மண்ணின் இந்தி எதிர்ப்பு போராட்டம் இன்னும் ஓயவில்லை என்பதை நிரூபிக்கும் வகையில், கோவை-பொள்ளாச்சி சாலையில் இருக்கும் மைல்கற்களில் எழுதப்பட்டிருந்த இந்தி எழுத்துக்கள தனி ஒருவனாக அழித்த சமூக ஆர்வலர் பெரியார் மணிக்கு சமூகவலைதளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

கோவை : பொள்ளாச்சி மண்ணின் இந்தி எதிர்ப்பு போராட்டம் இன்னும் ஓயவில்லை என்பதை நிரூபிக்கும் வகையில், கோவை-பொள்ளாச்சி சாலையில் இருக்கும் மைல்கற்களில் எழுதப்பட்டிருந்த இந்தி எழுத்துக்கள தனி ஒருவனாக அழித்த சமூக ஆர்வலர் பெரியார் மணிக்கு சமூகவலைதளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

பொள்ளாச்சிக்கு முக்கிய பங்கு:

இந்தி எதிர்ப்புப் போராட்டம் ஆனது 1937 இல் தொடங்கி இன்றளவும் தமிழகத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு தமிழகத்தில் மட்டும்தான் இந்தி மொழியை எதிர்த்து தொடர்ந்து போராட்டங்கள் நடைபெறுகிறது. அதேபோல உலக வரலாற்றிலேயே மொழிக்கான ஒரு போராட்டத்தில் தன்னுயிரை தியாகமாக கொடுப்பது போன்ற வரலாறுகள் தமிழகத்தைத் தவிர வேறு எங்கும் இல்லை எனலாம். இப்படி தமிழகம் முழுவதும் நடைபெற்ற மொழிப்போராட்டத்தில் கோவை மாவட்டம் பொள்ளாச்சிக்கும் ஒரு மிகப்பெரிய பங்கு உள்ளது.

1965ம் ஆண்டு நடைபெற்ற மொழிப்போராட்டதில் கோவை மாவட்டத்தின் பொள்ளாச்சியில் அஞ்சலகத்தின் பெயர் பலகையில் உள்ள இந்தி எழுத்தை அழிக்க முயன்ற போது பள்ளி சிறுவர்கள், குழந்தைகள் என அனைவரையும் காவல்துறையினர் மற்றும் ராணுவத்தினர் கொன்று குவித்துள்ளனர். இப்படி இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பொள்ளாச்சி முக்கிய பங்காற்றியுள்ளது. அதன் தொடர்ச்சிகள் இன்றளவும் இருந்து கொண்டுதான் இருக்கிறது.

இந்தி எழுத்துகள் அழிப்பு:

கோவை-பொள்ளாச்சி இடையேயான சாலை விரிவாக்கம் செய்யும் பணிகள் சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. தற்போது, அந்த பணிகள் ஓரளவு முடிவுற்று அந்த சாலையின் ஓரங்களில் மைல் கற்கள் வைக்கப்பட்டுள்ளன. இதில், இந்தி எழுத்துக்கள் முதலிலும், தமிழ் எழுத்துக்கள் இரண்டாவது இடத்திலும் எழுதப்பட்டிருப்பதற்கு தந்தை பெரியார் திராவிட கழகம் உட்பட பல்வேறு தமிழ் மற்றும் திராவிட அமைப்பினர் எதிர்ப்புகளை தெரிவித்தனர். 

அதேபோல, கிணத்துக்கடவு பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பெரியார் மணியும் தனது எதிர்ப்பை பதிவு செய்தார். இவர் தனிப்பட்ட விதமாகவும், பொள்ளாச்சி அருகே உள்ள கிணத்துக்கடவு பகுதியில் வைக்கப்பட்டிருந்த மைல் கற்களில் உள்ள இந்தி எழுத்துகளை மை பூசி அளித்தார். பின்னர், அவர் மைப்பூசி அளிப்பது போன்ற புகைப்படத்தையும், இந்தி மொழியின் எதிர்ப்பையும் சமூக வலைதளங்களில் பதிவிட்டார். இவர் முதலில் கிணத்துகடவு வட்டாரத்தில் உள்ள கோதவாடி மற்றும் ஏழூர் பகுதிகளில் உள்ள இரண்டு மைல்கல்லில் கடந்த 12-ம் தேதி இந்தி எழுத்துக்களை அழித்தார். பின்னர் அந்த அழிக்கபட்ட இந்தி எழுத்துக்கு பதிலாக மைல்கல்லில் ஆங்கிலத்தில் நெடுஞ்சாலை நிர்வாகத்தினர் எழுதினர்.

தொடர்ந்து, விடாப்பிடியாக மீண்டும் பெரியார் மணி ஆங்கிலம் முதலில் எழுதப்பட்டிருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 15-ம் தேதி ஆங்கில எழுத்துக்களையும் அழித்தார். இப்படி சமூக ஆர்வலர் பெரியார்மணி தொடர்ந்து தமிழ் மொழிக்கு ஆதரவான தனது போராட்டத்தை செய்து வருகிறார். இவருக்கு அலைபேசி மூலம் ஒரு சில மிரட்டல்கள் வந்தாலும் சமூகவலைதளங்களில் இவரது போராட்டத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

சர்ச்சை மைல்கல்:

கிணத்துக்கடவிலிருந்து கோவை வர 21 கிலோ மீட்டர் தூரம் என மைல்கல்லில் குறிப்பிடபட்டிருந்தது. ஆனால், தற்போது புதிதாக எழுதப்பட்ட மைல்கல்லில் வெறும் 9 கிலோ மீட்டர் என எழுதி உள்ளார்கள். இது சாலையைக் கடப்பவர்கள் மத்தியில் குழப்பங்களை ஏற்படுத்துகிறது. இப்படி இந்த கோவை-பொள்ளாச்சி சாலையில் உள்ள மைல்கல்லில் மொழி எதிர்ப்புகள் தொடங்கி பல்வேறு குழப்பங்கள் வரை பல சர்ச்சைகளுக்கு உள்ளாகி வருகிறது.



அடுத்து சட்டப்போராட்டம் :

இது குறித்து சமூக ஆர்வலர் பெரியார் மணி கூறும்போது:- தமிழ்நாட்டில் தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். மைல்கற்கலில் தாய் மொழிக்கு முதலிடம் கொடுக்காமல், இந்தி மொழிக்கும், மற்ற மொழிக்கும் முக்கியத்துவம் கொடுப்பது கண்டிக்கத்தக்கது. ஆகவே, தான் எனது பகுதிகளில் உள்ள மைல்கல்லில் இருக்கும் இந்தி மற்றும் ஆங்கில எழுத்துக்களை அழித்தேன். அடுத்தகட்டமாக, பொள்ளாச்சி சாலையில் உள்ள மாற்று மொழிகளை அளிக்க சட்டப்படியாக போராட உள்ளேன். இது தொடர்பாக வரும் திங்களன்று பொள்ளாச்சி சப் கலெக்டரை சந்தித்து மனு அளிக்க உள்ளேன். அதேபோல, கிணத்துக்கடவில் இருந்து கோவை செல்ல ஆகும் கிலோமீட்டர் தூரம் கூட தவறுதலாக எழுதப்பட்டிருக்கிறது. இதையும் நெடுஞ்சாலை நிர்வாகம் கவனத்தில் கொள்ள வேண்டும். ஆகவே, இந்தி திணிப்புகள் தொடர்பாக தீர்வு கிடைக்கும் வரை என் போராட்டம் ஓயாது, என்றார்.

Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...