3-வது நாளாக நீடிக்கும் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வரக் கோரி மனு

கோவை : நிலத்தடி நீர் எடுப்பது தொடர்பான தீர்ப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து 3-வது நாளாக நீடித்து வரும் வேலைநிறுத்த போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோவை மாவட்ட தண்ணீர் லாரி உரிமையாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.


கோவை : நிலத்தடி நீர் எடுப்பது தொடர்பான தீர்ப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து 3-வது நாளாக நீடித்து வரும் வேலைநிறுத்த போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோவை மாவட்ட தண்ணீர் லாரி உரிமையாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

நிலத்தடி நீர் எடுப்பது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு ஒன்றைப் பிறப்பித்திருந்தது. இந்த உத்தரவுக்கு எதிராக தமிழகம் முழுவதும் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் 3-வது நாளாக தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், அடுக்குமாடி குடியிருப்புகள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள், வணிக வளாகங்கள் என பல தரப்பினர் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். அதன் ஒருபகுதியாக, கோவை மாவட்டத்தில் சுமார் 4,500 தண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றுள்ளன. 

இந்த நிலையில், தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில், அரசாணை எண் 142-ல் திருத்தம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி கோவை மாவட்ட தண்ணீர் லாரி உரிமையாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர். அதில், மூன்றாவது நாளாக வேலைநிறுத்தம் தொடரும் சூழலில் பல்வேறு வகையில் பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளதாகவும், எனவே அரசு உரிய நடவடிக்கை மேற்கொண்டு தொடரும் வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவரவேண்டும் என அப்போது அவர்கள் வலியுறுத்தினர்.

Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...