'மேற்கு திசையில் குடியிருந்தால் தீட்டுப்பட்டு விடும்' : மூடநம்பிக்கையால் அப்புறப்படுத்தப்பட்ட மக்கள்

திருப்பூர் : காங்கயம் அருகே ஊரின் மேற்கு திசையில் பட்டியல் இனத்தவர் குடியிருந்தால், ஊருக்கு ஆகாது எனக் கூறி அப்புறப்படுத்தப்பட்ட மக்களை அதே இடத்தில் குடியமர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் காங்கயம் வட்டாட்சியரிடம் பாதிக்கப்பட்டவர்கள் மனு கொடுத்தனர்.

திருப்பூர் : காங்கயம் அருகே ஊரின் மேற்கு திசையில் பட்டியல் இனத்தவர் குடியிருந்தால், ஊருக்கு ஆகாது எனக் கூறி அப்புறப்படுத்தப்பட்ட மக்களை அதே இடத்தில் குடியமர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் காங்கயம் வட்டாட்சியரிடம் பாதிக்கப்பட்டவர்கள் மனு கொடுத்தனர்.



இது குறித்து புள்ளக்காளிபாளையம் பகுதி மக்கள் ஆதித்தமிழர் ஜனநாயகப் பேரவையின் தலைவர் அ.சு.பவுத்தன் தலைமையில் காங்கயம் வட்டாட்சியரிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது :- காங்கயம் தாலுகா, நிழலி ஊராட்சிக்கு உட்பட்ட புள்ளக்காளிபாளையம் பகுதியைச் சேர்ந்த பட்டியலின மக்கள் 20 பேருக்கு ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் 1988-ம் ஆண்டு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டது. இதனையடுத்து, இவர்கள் அங்கு குடிசைகள் அமைத்து குடியிருந்தபோது, அப்பகுதியைச் சேர்ந்த மாற்று சமூகத்தினர் சிலர், தாழ்த்தப்பட்ட மக்கள் ஊரின் மேற்குத் திசையில் குடியிருந்தால் தீட்டுப்பட்டு விடும் எனக் கூறி, இவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்திவிட்டனர்.

 

இந்தச் சம்பவம் நடந்து 30 ஆண்டுகளாகியும் இன்று வரையில் இவர்கள் அங்கு குடியேற முடியவில்லை என்றும், இந்த செயல் மிகவும் கொடூரமானது என பாதிக்கப்பட்டவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே, பாதிக்கப்பட்ட 20 குடும்பங்களை அதே இடத்தில் குடியமர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தப் புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...