குடியிருக்க நிலம் கேட்டு குமாரசாமி காலனி பொதுமக்கள் உண்ணா நிலை போராட்டம்

கோவை: கோவை மாநகராட்சி, 21-வது வார்டில் வசித்து வரும் பொதுமக்கள், வசிக்கும் இடத்திற்கான பட்டா அல்லது அருகாமையில் மாற்று இடம் வேண்டி தங்களது வீடுகளில் இருந்தவாறு இன்று ஒரு நாள் உண்ணாநிலைப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

கோவை: கோவை மாநகராட்சி, 21-வது வார்டில் வசித்து வரும் பொதுமக்கள், வசிக்கும் இடத்திற்கான பட்டா அல்லது அருகாமையில் மாற்று இடம் வேண்டி தங்களது வீடுகளில் இருந்தவாறு இன்று ஒரு நாள் உண்ணாநிலைப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள முத்தண்ணன் குளத்திற்கு அருகில் கடந்த 90 வருடங்களாக 350-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். 2018-19 நிதி நிலை அறிகையில் நீர்நிலை அருகில் உள்ள மக்களுக்கு தனியார் நிலங்களை கையகப்படுத்தி குடியிருக்க மாற்று இடம் வழங்கப்படும் என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, முத்தண்ணன் குளத்தை ஒட்டி வசித்து வரும் குடியிருப்புகளை அகற்றுவதற்கான பணிகளை குடிசைமாற்று வாரியம் மற்றும் கோவை மாநகராட்சி நிர்வாகத்தினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில், தாங்கள் வசிக்கும் இடத்திற்கு பட்டா அல்லது நகருக்குள் குடிமனை வழங்கிடக் கோரி, உழைப்போர் உரிமை இயக்கம் சார்பில் அப்பகுதி மக்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து, போராட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் எம்.எஸ்.வேல்முருகன் கூறியதாவது, "90 வருடங்களாக நீர் நிலைக்கு பாதிப்புகள் இல்லாமல், இங்கு வசித்து வரும் 388 நபர்களுக்கு அருகாமையில் உள்ள வீரகேரளம் மற்றும் நரசம்பதி ஆகிய பகுதிகளில் உள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடத்தில் குடிமனை ஒதுக்கப்படும் என 2010 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது.

ஆனால், இன்று வரை மாற்று இடம் வழங்கப்படவில்லை. 25 ஏக்கர் பரப்பிலான அந்த இடம் வேளாண் பல்கலைக்கழகத்திற்கு 12 வருடங்களுக்கு குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்டு, தற்போது குத்தகை காலம் முடிந்துவிட்டது. நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதாகக் கூறியும், 'ஸ்மார்ட் சிட்டி' திட்டம் என்றும் நகரின் பூர்வகுடி மக்களை நகரைவிட்டு வெளியேற்றும் நடவடிக்கைகளை அரசு செயல்படுத்தி வருகிறது.

இதனைக் கண்டித்து இன்று ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகிறோம். இதனைத் தொடர்ந்து நவம்பர் மாதத்தில் நிலத்திற்கான மாநாடும், மக்களைத் திரட்டி தொடர் போராட்டங்களும் நடத்தப்படும்." என்றார்.

Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...