கோவையின் சுற்றுலாத்தலங்கள் குறித்து விழிப்புணர்வு பேரணி

கோவை: மாவட்ட சுற்றுலா தலங்களின் முக்கியத்துவம் மற்றும் வரலாற்றை அறிந்து கொள்ளும் விழிப்புணர்வு பேரணியை இன்று கோவை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.

கோவை: மாவட்ட சுற்றுலா தலங்களின் முக்கியத்துவம் மற்றும் வரலாற்றை அறிந்து கொள்ளும் விழிப்புணர்வு பேரணியை இன்று கோவை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.



தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களில் அந்தந்த மாவட்டங்களில் உள்ள சுற்றுலா தலங்கள் அதன் வரலாறு மற்றும் முக்கியத்துவத்தை பள்ளி மாணவர்கள் அறிந்து கொள்ளும் ஒரு நாள் விழிப்புணர்வு சுற்றுலா நடத்தப்படும் என மானிய கோரிக்கையின் போது தமிழக சுற்றுலாத் துறை சார்பில் அறிவிக்கப்பட்டது.

இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டம் பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பயிலும் மாணவ-மாணவியர்கள் கோவை வரலாறு மற்றும் சுற்றுலா தலங்கள் குறித்து அறிந்து கொள்ளும் வகையில் அரசு பள்ளிகளை சேர்ந்த 150 மாணவர்கள் தேர்வு செய்யபட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அழைத்து வரப்பட்டனர்.



இதனையொட்டி நடைபெற்ற பேரணியை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் துவக்கி வைத்தார். பின்னர் மாணவ,மாணவியர்கள் அரசு அருங்காட்சியம், தமிழ்நாடு வேளாண் பல்கலை கழகம், பேரூர் பட்டீஸ்வரர் கோவில், ஈஷா யோக மையம் ஆகிய இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட உள்ளனர்.

முதலாவதாக அவினாசி சாலையில் உள்ள ஜி.டி.நாயுடு அருங்காட்சியகத்தை மாணவர்கள் ஆர்வமுடன் பார்வையிட்டனர். மாணவர்களுக்கு சுற்றுலா சார்ந்த வினாடி-வினா நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வெற்றி பெறும் மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படும் என மாவட்ட சுற்றுலா அலுவலர் ராஜன் தெரிவித்தார்.



இந்த நிகழ்வில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அய்யண்ணன், உதவி சுற்றுலா அலுவலர், மக்கள் தொடர்பு அதிகாரி நல்லதம்பி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தொண்டாமுத்தூர், பொள்ளாச்சி, செம்மாண்டம்பாளையம் பகுதிகளைச் சேர்ந்த அரசுப் பள்ளியை சேர்ந்த மாணவ-மாணவிகள் இந்த சுற்றுலாவில் கலந்து கொண்டனர். உணவு, குடிநீர், பேருந்து வசதி ஆகியன தமிழ்நாடு சுற்றுலா துறையின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.



Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...