அரசு அலுவலகங்களில் அம்பேத்கர் சிலை வைக்க அனுமதி கோரி மனு

கோவை : அரசு அலுவலகங்களில் சட்டமேதை அம்பேத்கர் சிலையை வைக்க அனுமதி கோரி கோவை மாவட்ட ஆட்சியரிடம் சமூகநீதி கட்சியினர் மனு அளித்தனர்.

கோவை : அரசு அலுவலகங்களில் சட்டமேதை அம்பேத்கர் சிலையை வைக்க அனுமதி கோரி கோவை மாவட்ட ஆட்சியரிடம் சமூகநீதி கட்சியினர் மனு அளித்தனர். 

மக்கள் குறை தீர்ப்பு நாளான இன்று சமூகநீதி கட்சி சார்பில் மனு ஒன்று அளிக்கப்பட்டது.அதில் கூறியிருப்பதாவது :- சட்டமேதை அம்பேத்கரின் சிலையை வைக்க மாநகர காவல்துறை அனுமதி மறுக்கின்றனர். மேலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உட்பட அனைத்து அரசு அலுவலகங்களிலும் அவரது திருவுருவ சிலையை வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

இது குறித்து சமூகநீதி கட்சி மாநில தலைவர் பன்னீர்செல்வம் கூறுகையில்," ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் எதிரில் சிலை வைத்திட கோவை மாநகராட்சி மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, நெடுஞ்சாலைத் துறை, பொதுப் பணித்துறை அனுமதி வழங்கிய நிலையில், காவல்துறை அனுமதி மறுத்து வருகிறது.  

மேலும், அரசு அலுவலகங்களில் அம்பேத்கர் படத்தை வைக்க அரசாணை இருந்தும் பெரும்பாலான இடங்களில் அம்பேத்கர் படங்கள் வைக்கப்படாமல் உள்ளது. 

ஆகவே, உடனடியாக ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு சிலை அமைக்க மாநகர காவல்துறை அனுமதி அளித்திட ஆட்சியர் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்," இவ்வாறு கூறினார். 

Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...