மேட்டுப்பாளையத்தில் அடிப்படை வசதிகள் செய்து தர செல்போன் டவர் மீதேறி மாணவர்கள் போராட்டம்

கோவை: மேட்டுப்பாளையத்தில் தாங்கள் வசிக்கும் பகுதிக்கு அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி செல்போன் டவர் மீதேறி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கோவை: மேட்டுப்பாளையத்தில் தாங்கள் வசிக்கும் பகுதிக்கு அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி செல்போன் டவர் மீதேறி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேட்டுப்பாளையத்தில், சிக்கதாசம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ளது உக்கா நகர். இங்கு 130 குடியிருப்புகள் உள்ளன. சுமார் ஐநூற்றுக்கும் மேற்பட்டோர் வசிக்கும் இப்பகுதிக்கு கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக முறையான கழிவுநீர் வடிகால் வசதி, சுகாதார வசதி, மின்சார வசதி, சாலை வசதி என அனைத்து அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தி தர ஊராட்சி நிர்வாகம் மறுப்பதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். 

இந்த நிலையில், இங்குள்ள குடியிருப்புகளுக்கு மின்சார இணைப்பு இல்லாத காரணத்தினால் தங்களது படிப்பு பாதிக்கப்படுவதாக கூறி இன்று காலை பள்ளிக்கு செல்லவேண்டிய அப்பகுதி மாணவர்கள் கிருபாகரன், சந்தோஸ், அருண், கவியரசன், ரஞ்சித் ஆகியோர் பள்ளி சீருடையுடன் தீடீரென அருகில் இருந்த உக்கா நகர் செல்போன் டவர் மீதேறி போராட்டத்தில் ஈடுபட்டனர். 



உக்கா நகர் பகுதிக்கு மின்சாரம், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதாக அரசு உயர் அதிகாரிகள் வாக்குறுதியளித்தால் மட்டுமே கீழே இறங்குவோம் என தெரிவித்து செல்போன் டவரின் உச்சிக்கு சென்று விட்டனர்.

இதனையடுத்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மேட்டுப்பாளையம் காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு மீட்பு படையினர் செல்போன் டவரில் இருந்த மாணவர்களை கீழிறங்க வலியுறுத்தினர். மாணவர்களின் பெற்றோரும் கீழே இறங்கி வர கோரிக்கை விடுத்தனர். 

ஆனால், மாணவர்கள் இறங்க மறுத்த காரணத்தினால் மேட்டுப்பாளையம் வட்டாச்சியர் புனிதா மற்றும் காவல் அதிகாரிகள் மாணவர்களோடு பேச்சு நடத்தி, உக்கா நகர் பகுதிக்கு மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்ய தடையாக உள்ள பிரச்சனைகள் தீர்க்கப்பட்டு விரைவில் அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்படும் என உறுதியளித்தனர். 

இதைத் தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கீழிறங்கி வந்தனர். பள்ளி மாணவர்களின் இந்த போராட்டத்தினால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...