கோவையில் தொடர்ந்து செல்போன் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட 7 பேர் கைது

கோவை : கோவை மாநகரில் பல்வேறு பகுதிகளில் இருசக்கர வாகனங்களில் சென்று செல்போன்களை பறித்துச் செல்லும் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த 7 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.


கோவை : கோவை மாநகரில் பல்வேறு பகுதிகளில் இருசக்கர வாகனங்களில் சென்று செல்போன்களை பறித்துச் செல்லும் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த 7 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

கோவை மாநகரில் ராமநாதபுரம், வெரைட்டி ஹால், ஆர்.எஸ்.புரம் காவல்நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் இருசக்கர வாகனங்களில் வரும் மர்ம நபர்கள் சாலைகளில் நடந்து செல்வோரிடமிருந்து செல்போன்களை பறித்துச் செல்வதாக புகார் வந்தது. 

இதைத்தொடர்ந்து, அந்த சம்பவத்தில் ஈடுபடும் நபர்களை பிடிக்க மாநகர காவல் ஆணையர் சுமித் சரண் உத்தரவிட்டிருந்தார். இதன் பேரில் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் இராமநாதபுரம் பகுதிக்கு உட்பட்ட இடங்களில் செல்போன் பேசி சென்றவர்களிடம் செல்போல் பறித்த கொள்ளையர்களான குனியமுத்தூர் சேர்ந்த அன்ஷீட் (21), பாலக்காட்டை சேர்ந்த சுகைல் (17)ஆகியோரை கைது செய்தனர். 

இவர்களிடம் இருந்து 2 செல்போன்கள் இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக மேலும் இருவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதேபோல, வெரைட்டி ஹால் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் செல்போன் மற்றும் இரு சக்கர வாகனங்களை திருடியதாக மானாமதுரையைச் சேர்ந்த ராஜகோபால் (23), தியாகி குமரன் வீதியை சேர்ந்த பிரகாஷ் (19) ஆகியோரை கைது செய்தனர்.

மேலும், ஆர்.எஸ். புரம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட செல்போன் பறிப்பில் ஈடுபட்ட பி.என்புதூரை சேர்ந்த கமலேஷ் (22), வடக்கு ஹவுசிங் யூனிட் சுதாகர் (42), பி.என் பாளையத்தை சேர்ந்த ரஞ்சித் (21) ஆகியோரையும் கைது செய்தனர். இவர்களிடமிருந்து செல்போன்கள் மற்றும் இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...