ஆயுத பூஜையை முன்னிட்டு பூக்களின் விலை கிடுகிடு உயர்வு : மேட்டுப்பாளைய விவசாயிகள் மகிழ்ச்சி

கோவை : ஆயுத பூஜையை முன்னிட்டு கடந்தாண்டை விட பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளதால் மேட்டுப்பாளைய விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கோவை : ஆயுத பூஜையை முன்னிட்டு கடந்தாண்டை விட பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளதால் மேட்டுப்பாளைய விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மேட்டுப்பாளையத்தில் மலை அடிவாரப் பகுதிகளில் விவசாய நிலங்களில் வனவிலங்குகளின் தொல்லை காரணமாக பணப்பயிரான வாழை, கரும்பு விவசாயத்தை தவிர்த்து, தற்போது பூக்கள் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதற்கேற்றவாறு, எதிர்பார்த்த பருவமழையும் நல்ல முறையில் பெய்து வருவதால், இவ்வாண்டு வழக்கத்தை விட கூடுதலாக பூக்கள் நடவு செய்யப்பட்டன. குறிப்பாக, பூஜைகளுக்கு பயன்படுத்தும் செண்டு மல்லி, கோழிக்கொண்டை போன்ற பூக்களின் வகைகள் பல்வேறு வண்ணங்களில் பயிர் செய்யபட்டுள்ளன. 



எப்போதும் கேரளாவிற்கு அதிக அளவு பூக்கள் ஏற்றுமதி மேட்டுப்பாளையத்தில் இருந்து செய்யப்படும். ஆனால், கேரளாவில் ஏற்பட்ட வெள்ளபாதிப்பு காரணமாக இந்தாண்டு பெரிய அளவில் பூக்களுக்கு விலை கிடைக்காமல் விவசாயிகள் ஏமாற்றமடைந்தனர். 



இந்த நிலையில், தற்போது ஆயுத பூஜை விழா கொண்டாட்டம் வர இருப்பதால், பூக்களின் விலையும் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இதனால், பூ விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த மாதத்தை ஒப்பிடும் போது , 30 முதல் 40 சதவிகித அளவுக்கு விலை ஏற்றம் கண்டு, ஒரு கிலோ செண்டு மல்லி ரூ. 60 முதல் ரூ. 70 வரை தற்போது மொத்தக் கொள்முதல் செய்யப்படுகிறது. இதேபோல், கோழிக்கொண்டை பூவும் ரூ. 50 முதல் ரூ. 60 வரை விற்பனையாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...