வரி வேறுபாடே இந்தியப் பொருட்களுக்கு பெரும் பிரச்சனை : ஐ.டி.எஃப்.,

திருப்பூர் : வரி வேறுபாடுகளே இந்தியப் பொருட்களுக்கு பெரும் பிரச்சனையாக இருக்கிறது என இந்திய ஆடை தொழிலதிபர்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது



திருப்பூர் : வரி வேறுபாடுகளே இந்தியப் பொருட்களுக்கு பெரும் பிரச்சனையாக இருக்கிறது என இந்திய ஆடை தொழிலதிபர்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. 

இந்திய ஆடைத்துறையில் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி செய்வதில் இருக்கும் பிரச்சனைகள் குறித்து மத்திய அரசுக்கு எடுத்துரைக்கும் வகையில், இந்திய ஆடை தொழிலதிபர்களின் கூட்டமைப்பு சார்பிலான நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு மும்பையைச் சேர்ந்த சர்வதேச நிறுவனமான ஜி.என்.பி.சி.யும் தனது பங்களிப்பை அளித்துள்ளது. இந்த நிகழ்ச்சியில், மத்திய தொழில் மற்றும் வர்த்தகத் துறையின் இணை செயலாளர் கேஷவ் சந்திரா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். இதேபோல, மத்திய ஜவுளித்துறையின் உற்பத்தி ஆலோசகர் அதிதீ ரவுத் நிகழ்ச்சியில் கவுரவிக்கப்பட்டார். 



கட்டமைப்பு, போக்குவரத்து செலவு அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் கடந்த 207-ம் ஆண்டு முதல் ஆடைகள் மற்றும் அது தொடர்பான பொருட்கள் ஏற்றுமதி செய்வது கடுமையாகக் குறைந்துள்ளது. இதனிடையே, ஏற்றுமதி சந்தைகளில் நிலவும் வரி விகிதங்கள் இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறது. உலகம் முழுவதும் உள்ள இலவச உற்பத்தி ஒப்பந்தத்தில் உறுப்பு நாடாக இருக்கும் நாடுகளில் இருப்பவர்கள் மிகவும் பயனடைகின்றனர். இந்த ஒப்பந்தத்தின் மூலம் ஆடை தொழில்துறையில் எந்தவிதமான வரியும் விதிக்கப்படுவதில்லை.



உலக ஏற்றுமதியில் இந்தியா, சீன, வங்கதேசம், வியாட்நாம், கம்போடியா, பாகிஸ்தான், துருக்கி போன்ற டாப் 20 நாடுகள் மட்டும் 85% ஏற்றுமதியில் முக்கிய பங்கு வகிக்கின்றன. வங்கதேசம், கம்போடியா ஆகிய நாடுகள், வளரும் நாடுகள், வளர்ந்த நாடுகள் ஆகியவற்றிற்கு வரியினை மாற்றியமைத்து வருகின்றன. 

பாகிஸ்தான் மற்றும் ஐரோப்பா யூனியன் நாடுகளின் ஜுரோ வரி முறையினால், இந்தியப் பொருட்கள் சந்தைகளில் அதிகளவு தேக்கமடைகின்றன. முக்கிய இறக்குமதி நாடுகளான அமெரிக்கா, ஐரோப்பா யூனியன் நாடுகள், கனடா, சீன, ஆஸ்திரேலியா, ஸ்விட்சர்லாந்து, ஜி.சி.சி. நாடுகள், இஸ்ரேல் மற்றும் சிலி உள்ளிட்ட நாடுகளில் வரி வேறுபாடுகளே இந்தியப் பொருட்களுக்கு பெரும் பிரச்சனையாக இருக்கிறது. இந்த நாடுகளில் 1% முதல் 40% வரை வரி விகிதத்தில் மாற்றங்கள் நிலவுகின்றன. 



எனவே, வரி விகிதத்தால் இந்திய ஏற்றுமதியாளர்கள் பாதிக்கப்படாதவாறு பல்வேறு ஒப்பந்தங்களை மேற்கொள்ள வேண்டும் என இந்திய ஆடை தொழிலதிபர்களின் கூட்டமைப்பின் சார்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது. 

Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...