உடுமலையில் சாக்கடையில் சிசுவின் சடலம் கண்டெடுப்பு : ரத்தக் கசிவோடு மயங்கி கிடந்த மனநலம் பாதிக்கப்பட்டப் பெண்ணால் பரபரப்பு

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே சாக்கடையில் சிசுவின் சடலம் கண்டெடுக்கப்பட்ட நிலையில், மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் ரத்தக்கசிவு ஏற்பட்ட நிலையில் மயங்கிக் கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே சாக்கடையில் சிசுவின் சடலம் கண்டெடுக்கப்பட்ட நிலையில், மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் ரத்தக்கசிவு ஏற்பட்ட நிலையில் மயங்கிக் கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

உடுமலை அருகே சின்னவீரம்பட்டி கிராமத்தில் இன்று காலை 9 மணியளவில் சாக்கடையில் சிசுவின் சடலம் கிடப்பதை கண்ட பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனா். உடனடியாக வந்த போலீசார் சிசுவின் சடலத்தை மீட்டு ஆம்புலன்ஸ் மூலமாக உடுமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர், விசாரணை செய்ததில் அங்கிருந்த பொதுமக்கள் சிலர், நேற்று மாலை 6 மணியளவில் கா்ப்பிணி பெண் ஒருவர் பேருந்தில் இருந்து இறங்கி நிழற்குடையில் அமா்ந்திருந்ததாக தகவல் தெரிவித்தனர்.

அதன் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில், சிசு சடலம் கண்டுபிடிக்கப்பட்ட இடத்திலிருந்து ரத்தம் கசிந்த இடம் வரை சென்று பார்த்த போது, சாலையோரத்தில் இரத்த கசிவோடு பெண் ஒருவா் மயக்கமடைந்து கிடப்பதை கண்டறிந்தனர். பின்னர், அந்த பெண்ணை மீட்டு உடுமலை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கபட்டு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா் 

அவரிடம் விசாரணை செய்ததில் பிருந்தா (23) ஈரோடு பகுதியைச் சேர்ந்தவர் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும், தஞ்சாவூர் ஒரத்தநாட்டைச் சேர்ந்த அவரது கணவர் செந்தில், திருப்பூரில் இரண்டு ஆண்டுகளாக பணியாற்றி வருவதும் கணடுபிடிக்கப்பட்டது. 

Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...