அதிமுக-வின் சிஸ்டம் சிதைக்கப்பட்டு விட்டதாக தங்கதமிழ்செல்வன் கூறுவது ஏற்புடையதல்ல - தனியரசு

திருப்பூர் : அதிமுகவின் சிஸ்டம் சிதைக்கப்பட்டு விட்டதாக தங்கதமிழ்செல்வன் கூறுவது ஏற்புடையதல்ல என திருப்பூரில் காங்கேயம் சட்டமன்ற உறுப்பினர் தனியரசு தெரிவித்தார்.

திருப்பூர் : அதிமுகவின் சிஸ்டம் சிதைக்கப்பட்டு விட்டதாக தங்கதமிழ்செல்வன் கூறுவது ஏற்புடையதல்ல என திருப்பூரில் காங்கேயம் சட்டமன்ற உறுப்பினர் தனியரசு தெரிவித்தார்.

திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தில் 18 புதிய பேருந்துகளை கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் கொடியசைத்துத் துவக்கி வைத்தார். இதனையடுத்து காங்கேயம் சட்டமன்ற உறுப்பினர் தனியரசு செய்தியாளகளிடம் பேசுகையில், அதிமுகவின் உட்கட்சி பிரச்சனைகள் தமிழக அரசிலும் நிர்வாகத்திலும் தாக்கத்தை ஏற்படுத்துவதாக கூறினார்.



இதனால், தேர்தல் ஆணையமும் உச்ச நீதிமன்றமும் இந்த விவகாரத்தை விரைந்து முடிக்க வேண்டும், நேற்று ஒ.பி.எஸ் அவர்கள் சசிகலா அதிமுகவின் அடிப்படை உறுப்பினராக கூட இல்லை என தெரிவித்துள்ளார். முன்னதாக இவர்களே சேர்ந்தது தான் அவரை பொது செயலாளராக அறிவித்தார்கள், இது கட்சிக்குள் மீண்டும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்தார்.



தற்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் ஆகியோர் திறம்பட செயல்படுகிறார்கள். ஒ.பி.எஸ், இ.பி.எஸ் இணைந்தது போல டி.டி.வியும் இணைவார் என்று கூறிய காங்கேயம் சட்டமன்ற உறுப்பினர் தனியரசு, அதிமுகவின் சிஸ்டம் எந்த விதத்திலும் சிதைக்கப்படவில்லை எனவும் தங்கத்தமிழ் செல்வன் கூற்று ஏற்புடையதல்ல என்றார்.

Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...