கோம்பிங் ஆபரேசன்: மாவோயிஸ்ட் தேடுதல் வேட்டையில் தமிழக-கேரள போலீசார்

கோவை: கேரள எல்லைப் பகுதியில் மாவோயிஸ்ட் கும்பல் மீண்டும் நடமாடுவதால் அவர்களைப் பிடிக்க தமிழக-கேரள போலீசார் கோம்பிங் ஆபரேசன் என்ற பெயரில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

கோவை: கேரள எல்லைப் பகுதியில் மாவோயிஸ்ட் கும்பல் மீண்டும் நடமாடுவதால் அவர்களைப் பிடிக்க தமிழக-கேரள போலீசார் கோம்பிங் ஆபரேசன் என்ற பெயரில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் வயநாட்டில் மாவோயிஸ்டுகள் துப்பாக்கிகளுடன் நடமாடியதாக தகவல் கிடைத்துள்ளது. மாவோயிஸ்ட் கும்பலைச் சேர்ந்த ஜிசா உள்பட சிலர் வனப்பகுதியில் உள்ள வீடுகளுக்குச் சென்று நோட்டீஸ் வழங்கி ஆதரவு கேட்டு உள்ளதாகவும் காவல் துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.

இந்த மாவோயிஸ்டுகள் கோவையை சுற்றியுள்ள கேரள எல்லை கிராமங்களில் பதுங்கி இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களாக மேட்டுப்பாளையம், சிறுமுகை, வாளையார் ஆனை கட்டி சிறுவாணி, மலைப்பகுதிகளில் கேரளாவின் தண்டர் போல்ட் போலீசாரும், தமிழக கியூ பிராஞ்ச், நக்சல் தடுப்பு படை, வனத்துறையினர் இணைந்து தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சிறுவாணி, பில்லூர், காஞ்சிபுரம், அணை பகுதிகளில் பகுதிகளில் தீவிரமாக தேடும் பணி நடைபெற்று வருகிறது. மாவோயிஸ்டுகள் கிராமங்களுக்கு வந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்கும்படி பொது மக்களை போலீசார்  கேட்டுக் கொண்டுள்ளனர்.

கோவையைச் சேர்ந்த மாவோயிஸ்ட் கேரளாவில் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் கண்காணிப்பு பணியை மேற்கொண்டுள்ளனர். அதேபோல சந்தேகப்படும் படியாக எந்த நபர் வந்தாலும் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் பொதுமக்களிடம் அறிவுறுத்தியுள்ளனர்.

Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...