தீபாவளியை முன்னிட்டு கோவையில் இருந்து தினந்தோறும் 120 பேருந்துகள் இயக்கப்படும் - டி.என்.எஸ்.டி.சி

கோவை: அரசு போக்குவரத்து கழகம் (கோவை) சார்பில் தீபாவளி பண்டிகைக்கு நவம்பர் 1-ம் தேதி முதல் தினமும் தொலைதூர பயணங்களுக்கும், வெளியூர்களுக்கும் சுமார் 120 பேருந்துகள் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

கோவை: அரசு போக்குவரத்து கழகம் (கோவை) சார்பில் தீபாவளி பண்டிகைக்கு நவம்பர் 1-ம் தேதி முதல் தினமும் தொலைதூர பயணங்களுக்கும், வெளியூர்களுக்கும் சுமார் 120 பேருந்துகள் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

வருகின்ற நவம்பர் மாதம் 6-ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. தொழில் நகரமான கோவைக்கு தமிழகத்தின் பல மாவட்டங்களிலிருந்து வந்து தொழிலாளர்கள் பணி புரிகின்றனர், சிலர் சொந்தமாக தொழில் செய்தும் வருகின்றனர். இதன் காரணமாக தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊர் செல்வோர் கோவையில் அதிகம்.

கோவையிலிருந்து செல்லும் பயணிகளுக்கு பேருந்துகள் தட்டுப்பாடின்றி கிடைக்க அரசு போக்குவரத்து கழகம் கோவை சார்பில் சென்னை, திருநெல்வேலி, ராமேஸ்வரம், மதுரை, தேனி, தூத்துக்குடி, திருச்சி, சேலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு நவம்பர் 1-ம் தேதி முதல் தினமும் 120 பேருந்துகளை பயணிகள் அதிகம் செல்லும் மாவட்டங்களுக்கு ஏற்றவாறு இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இது குறித்து போக்குவரத்து துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "தமிழக அரசு சார்பாக வழங்கப்பட்ட புதிய பேருந்துகளில் 72 பேருந்துகளும் பழைய பேருந்துகள் 48-ம் இயக்க திட்டமிட்டுள்ளோம். பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்தல் மேலும் பேருந்துகளை அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளோம்." என்றார்.

தமிழக அரசால் போக்குவரத்து கழகம் சார்பில் தமிழகம் முழுவதும் 20,550 விரைவு பேருந்துகள் எஸ்.ஈ.டி.சி. (S.E.T.C. ) தீபாவளிக்கு இயக்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கோவைக்கு பேருந்துகள் எவ்வளவு தேவை என்பது குறித்து அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...