சுற்றுலா வாகனங்களுக்கு விதிக்கப்பட்ட தடையால் வாழ்வாதாராம் பாதிக்கப்படுவதாக 16 கிராம மக்கள் மனு

நீலகிரி : தொடர் விபத்து ஏற்படுவதால் உதகை - கல்லட்டி மலைப்பாதையில் சுற்றுலா வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், மசினகுடி, மாயார் உள்ளிட்ட 16 கிராம மக்கள் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் மனு அளித்தனர்

நீலகிரி : தொடர் விபத்து ஏற்படுவதால் உதகை - கல்லட்டி மலைப்பாதையில் சுற்றுலா வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், மசினகுடி, மாயார் உள்ளிட்ட 16 கிராம மக்கள் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் மனு அளித்தனர். 

மலை மாவட்டமான நீலகிரியின் உதகையில் இருந்து கல்லட்டி வழியாக கேரளா, கர்நாடாக செல்லும் சுற்றுலா பயணிகளும், சமவெளி பிரதேசங்களில் இருந்து முதுமலை புலிகள் காப்பகம் செல்லும் சுற்றுலா பயணிகள் 36 கொண்டை ஊசி வளைவுகளைக் கொண்ட கல்லட்டி மலைப்பாதை வழியாக சென்று வருகின்றனர். இவ்வாறு செல்லும் சுற்றுலாப் பயணிகள் விபத்தில் சிக்கி பலியாகி வருவது அதிகரித்துள்ளது. 



குறிப்பாக, கடந்த 1-ம் தேதி சென்னையிலிருந்து உதகைக்கு சுற்றுலா வந்தவர்களின் கார், இந்த மலைப்பாதையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், 2 நாட்களுக்குப் பிறகு 5 பேர் சடலங்களாகவும், இருவர் உயிருடனும் மீட்கப்பட்டனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, அந்த வழியாக சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள் செல்ல தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.

இந்த நிலையில், உதகை - கல்லட்டி மலைப்பாதையில் சுற்றுலா வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டதால், மசினகுடி, மாயார், சிங்காரா உள்ளிட்ட 16 கிராம மக்கள் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் மனு அளித்தனர். 

அந்த மனுவில் கூறியிருப்பதாவது :- மசினகுடி, மாவனெல்லா, மாயார், சிங்காரா உள்ளிட்ட 16 கிராம மக்கள், தாங்கள் பயிரிட்டு வரும் காய்கறிகள், பால் போன்ற அத்தியாவசியப் பொருட்களை எடுத்து செல்ல முடியாததால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, உள்ளூர் வாகனங்களுக்குத் தடை விதிக்கக் கூடாது, என வலியுறுத்தினர்.

இதுகுறித்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் கேட்ட போது, உள்ளூர் பதிவு எண் கொண்ட வாகனங்கள் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை சென்று வர தடை ஏதும் இல்லை என்றும், உள்ளூர் மக்கள் இதுகுறித்து பயப்பட தேவையில்லை எனத் தெரிவித்தார்

Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...