அரசு அதிகாரிகளின் கையெழுத்திட்டு போலி சான்றிதழ்கள்: பெண் கைது, வழக்கறிஞருக்கு வலை

திருப்பூர் : தாசில்தார் உள்ளிட்ட வருவாய் துறை அலுவலர்களின் கையெழுத்திட்டு போலி சான்றிதழ்கள் வழங்கி மோசடி செய்த சம்பவத்தில் ஈடுபட்ட பெண்ணை கைது செய்த போலீசார் தலைமறைவாக உள்ள வழக்கறிஞரை தேடி வருகின்றனர்.

திருப்பூர் : தாசில்தார் உள்ளிட்ட வருவாய் துறை அலுவலர்களின் கையெழுத்திட்டு போலி சான்றிதழ்கள் வழங்கி மோசடி செய்த சம்பவத்தில் ஈடுபட்ட பெண்ணை கைது செய்த போலீசார் தலைமறைவாக உள்ள வழக்கறிஞரை தேடி வருகின்றனர். 

திருமுருகன்பூண்டி பகுதியைச் சேர்ந்த மாசானவடிவு என்கிற பெண் நீதிமன்ற ஜாமீன் மற்றும் அரசு சலுகை பெறக்கூடிய வகையில் தாசில்தார், வி.ஏ.ஓ உள்ளிட்ட வருவாய்த்துறை அதிகாரிகளின் கையெழுத்து மற்றும் போலி முத்திரை பயன்படுத்தி போலி சான்றிதழ்கள் வழங்கி வந்துள்ளார்.



தொடர்ந்து பல போலி ஆவணங்கள் திருப்பூரில் கொடுக்கப்படுவதாகப் புகார் எழுந்தது. இதையடுத்து, போலி சான்றிதழ் புழக்கத்தை ஒழிக்கும் வகையில், வருவாய் துறை அலுவலர்கள் இணைந்து மணி என்பவர் உதவியுடன் போலி ஜாமின் சான்றிதழ் தயார் செய்து தர வேண்டும் என மாசானவடிவை அணுகியுள்ளனர்.



சான்றிதழை அளிக்க ரூ. 8,000 பேரம் பேசப்பட்டு, முன்பணமாக ரூ. 2,500-ஐ கொடுத்துள்ளார். இதனையடுத்து, இன்று போலி சான்றிதழ்களைத் தயார் செய்து மணியை தொடர்பு கொண்டு கொடுத்துள்ளார். அப்போது, அவரை கையும் களவுமாகப் பிடித்த வருவாய் துறையினர் திருப்பூர் 15 .வேலம்பாளையம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். தகவலறிந்து விரைந்து வந்த சார் ஆட்சியர் ஷ்ரவண்குமார் மாசானவடிவிடம் போலி சான்றிதழ்கள் தயார் செய்ய உதவியவர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டார். 



விசாரணையில் அழகு நிலையம் நடத்தி வரும் மகேஸ்வரி மற்றும் வழக்கறிஞர் சுதாகர் என்பவர்களோடு இனைந்து போலி முத்திரை மற்றும் சான்றிதழ்கள் தயாரித்துக் கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து மகேஸ்வரியையும் கைது செய்த காவல்துறை மாசானவடிவு மற்றும் மகேஸ்வரியையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறைக்கு அழைத்துச்சென்றனர். மேலும் தலைமறைவாக உள்ள வழக்கறிஞர் சுதாகரை தேடி வருகின்றனர்.



Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...