ரபேல் ஒப்பந்தத்தில் ரிலையன்ஸ் நிறுவனத்தை இணைக்க இந்திய அரசு கட்டாயப்படுத்தியது - போட்டு உடைத்த பிரான்ஸ் பத்திரிகை

பிரான்ஸ்: ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் நீடித்து வருகிறது. அதில் முக்கிய சர்ச்சையாக விளங்குவது அனில் அம்பானியின் தேர்வு. ரபேல் விமானங்கள் தொடர்பான வியாபாரத்தை இந்தியாவில் செய்வதற்காக பிரான்சின் டஸ்சால்ட் நிறுவனத்துடன் ரிலையன்ஸ் டிபன்ஸ் நிறுவனம் பங்குதாரராக இணைந்துள்ளது.

பிரான்ஸ்: ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் நீடித்து வருகிறது. அதில் முக்கிய சர்ச்சையாக விளங்குவது அனில் அம்பானியின் தேர்வு. ரபேல் விமானங்கள் தொடர்பான வியாபாரத்தை இந்தியாவில் செய்வதற்காக பிரான்சின் டஸ்சால்ட் நிறுவனத்துடன் ரிலையன்ஸ் டிபன்ஸ் நிறுவனம் பங்குதாரராக இணைந்துள்ளது.

ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு முந்தைய காங்கிரஸ் அரசு ஒப்பந்தம் செய்த போது ரபேல் தொழில்நுட்பங்களை பெற்று இந்தியாவிலேயே உற்பத்தில் செய்யும் பணியை இந்துஸ்தான் ஏரோனாடிக்கல் நிறுவனத்திடம் கொடுக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால், பா.ஜ.க அரசு செய்த புதிய ஒப்பந்தத்தில் இந்துஸ்தான் ஏரோனாடிக்கல் நிறுவனம் புறக்கணிக்கப்பட்டு ரிலையன்ஸ் டிபன்ஸ் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டது. 

இதில் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்திருப்பதாக காங்கிரஸ் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. மேலும், இந்த விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்த பிரான்ஸ் முன்னாள் அதிபர், ரபேல் ஒப்பந்தத்தில் ரிலையன்ஸ் இடம்பெற வேண்டும் என இந்திய அரசு தான் வலியுறுத்தியதாக தெரிவித்தார். 

அவரது இந்த கருத்து இந்திய அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதை முன்வைத்து ரபேல் முறைகேடு தொடர்பாக மத்திய அரசு மீது காங்கிரஸ் மேலும் வலுவான குற்றச்சாட்டுக்களை சுமத்தத் தொடங்கியது. ஆனால், இதற்கு பதில் அளித்த மத்திய அரசோ ரபேல் ஒப்பந்தத்தில் ரிலையன்ஸ் இணைந்ததற்கும் தங்களுக்கும் சம்பந்தம் இல்லை என தெரிவித்தது. 

இந்நிலையில், பிரான்ஸ் நாட்டின் புலனாய்வு செய்தி நிறுவனமான மீடியாபார்ட் (Mediapart) எனும் பத்திரிகை டஸ்சால்ட் நிறுவனத்துடன் இந்திய அரசு மேற்கொண்ட ரபேல் ஒப்பந்தம் தொடர்பான முக்கியமான தகவலை வெளியிட்டுள்ளது. அதில், ரபேல் ஒப்பந்தம் கையெழுத்தாக வேண்டுமெனில் இந்திய பங்குதாரராக ரிலையன்ஸ் இருக்க வேண்டும் என மத்திய அரசு சார்பில் கட்டாயப்படுத்தப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவல் டஸ்சால்ட் நிறுவனத்தின் ஆவணங்களிலேயே உள்ளது என மீடியாபார்ட் பத்திரிகை குறிப்பிட்டுள்ளது. ரபேல் முறைகேடுகள் தொடர்பாக எதிர்க்கட்சிகள் ஏற்கெனவே சரமாரியாகக் குற்றச்சாட்டுக்களை சுமத்தி வரும் நிலையில் பிரான்ஸ் பத்திரிகையின் இந்த தகவல் புதிய சர்ச்சை உருவாகியுள்ளது.

Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...