இது கோவை மாநகராட்சி அலுவலகமா..? இல்லை வாகன விற்பனை மையமா...?

கோவை : கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் வாகனங்கள் நிறுத்துவதற்கு இடநெருக்கடி அதிகமுள்ள சூழலில், அந்த இடத்தில் தனியார் வங்கியின் சார்பில் வாகன விற்பனை மேளா நடத்த அதிகாரிகள் அனுமதியளித்திருப்பது பொதுமக்களையும், சமூக ஆர்வலர்களையும் கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ளது.

கோவை : கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் வாகனங்கள் நிறுத்துவதற்கு இடநெருக்கடி அதிகமுள்ள சூழலில், அந்த இடத்தில் தனியார் வங்கியின் சார்பில் வாகன விற்பனை மேளா நடத்த அதிகாரிகள் அனுமதியளித்திருப்பது பொதுமக்களையும், சமூக ஆர்வலர்களையும் கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ளது.

டவுன்ஹாலில் அமைந்துள்ள மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்களின் வாகனங்களும், பல்வேறு பிரச்சனைகளுக்காக நாள்தோறும் மனு அளிக்க வரும் பொதுமக்களின் வாகனங்களும் வளாகத்தில் உள்ள வாகன நிறுத்தும் இடத்திலும், நுழைவு வாயிலை ஒட்டி அமைந்துள்ள ஸ்மார்ட் பென்ச் அருகிலும் நிறுத்தப்படுகின்றன.



மேலும், போதுமான இடவசதி இல்லாததால் பெரும்பாலான வாகனங்களை மாநகராட்சி வளாகத்திற்கு வெளியே நிறுத்துமாறு பொதுமக்களுக்கு வலியுறுத்தப்படுகிறது. 



இந்த நிலையில், இடநெருக்கடி அதிகமுள்ள வளாகத்திற்குள் தனியார் வங்கியின் சார்பில் இரண்டு நாட்களுக்கு வாகன விற்பனை மேளா நடத்த அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இடநெருக்கடி அதிகமுள்ள சூழலில் விற்பனையாளர்களின் ஆக்கிரமிப்பைக் கண்டு பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

மாநகராட்சியில் பணிபுரியும் பெயர் சொல்ல விரும்பாத ஊழியர்களும், கோவை மாநகராட்சியின் இந்த நடவடிக்கையால் தங்களின் வாகனங்களை இரண்டு நாட்களாக நிறுத்த இடமில்லாமல் அவதிப்படுவதாக தெரிவிக்கின்றனர்.



இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது :- இருசக்கர வாகனங்கள் வாங்க திட்டமிட்டுள்ள மாநகராட்சி பணியாளர்களுக்காக வளாகத்திற்குள் இருசக்கரம் மற்றும் 4 சக்கர வாகன விற்பனை முகாம் அமைக்க அனுமதிக்கப்பட்டுள்ளதாக, கூறினர்.

புகார் அளிக்க வரும் பொதுமக்களிடம், 'கூட்டமாக நிற்க அனுமதியில்லை' எனக் கூறி மாநகராட்சி வளாகத்தைவிட்டு வெளியே தள்ளும் அதிகாரிகள், விற்பனை மேளாவிற்கு மட்டும் அனுமதியளித்திருப்பது கோவை மக்களை முகம் சுழிக்க வைத்துள்ளது.

Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...