நெல்லையில் மாணவர்கள் மீதான தடியடிக்கு கண்டனம் : கோவை அரசு கல்லூரி மாணவர்கள் போராட்டம்

கோவை: மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் தேர்வுக் கட்டணத்தை உயர்த்தியதற்கு எதிராக நெல்லையில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது போலீசார் நடத்திய தடியடி சம்பவத்தைக் கண்டித்து கோவை அரசு கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.

கோவை: மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் தேர்வுக் கட்டணத்தை உயர்த்தியதற்கு எதிராக நெல்லையில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது போலீசார் நடத்திய தடியடி சம்பவத்தைக் கண்டித்து கோவை அரசு கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர். 

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திற்குட்பட்ட கல்லூரிகளில் ஆங்கிலம், தமிழ் என இரண்டு மொழிகளிலும் தேர்வு எழுதலாம் என்று இருந்த நடைமுறையை மாற்றியதற்கு மாணவர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. அதோடு, வருகைப்பதிவு குறைவான மாணவர்களுக்கு விதிக்கப்படும் அபாரதத் தொகையை பல்கலைக்கழக நிர்வாகம் உயர்த்தியது. அதாவது ஒவ்வொரு பாடத்திற்கும் ரூ. 500 என இருந்த கட்டணம், ரூ.1,000 ஆக உயர்த்தப்பட்டது. 

எனவே, இந்தக் கட்டணத்தை 200 ஆக குறைக்க வேண்டும் என வலியுறுத்தி நெல்லைக்குட்பட்ட 89 கல்லூரிகளின் மாணவர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களைக் கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்தினர். இந்த சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

இந்த நிலையில், நெல்லையில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்திய சம்பவத்தைக் கண்டித்து கோவை அரசு கலை கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், கைது செய்யப்பட்ட மாணவர்களுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். 

Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...