பூ கட்டும் தொழிலாளர்களுக்கு இடம் ஒதுக்கி தர வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு

கோவை : பூ கட்டும் தொழிலாளர்களுக்கு என தனியிடம் ஒதுக்கி தர வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியரிடம் 50-க்கும் மேற்பட்ட பூ கட்டும் தொழிலாளர்கள் மனு அளித்தனர்.


கோவை : பூ கட்டும் தொழிலாளர்களுக்கு என தனியிடம் ஒதுக்கி தர வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியரிடம் 50-க்கும் மேற்பட்ட பூ கட்டும் தொழிலாளர்கள் மனு அளித்தனர். 

அந்த மனுவில் கூறியிருப்பதாவது :- கோவை மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் பன்னீர் செல்வம் பூ மார்கெட் இயங்கி வருகிறது. இங்கு 148 கடைகள் வாடகை அடிப்படையிலும், காலி இடம் மேடை அமைத்து பூ கட்ட குத்தகைக்கு விடப்பட்டும் உள்ளது. 3 வருடத்திற்கு ஒரு முறை டெண்டரும், கடைகள் வருடத்திற்கு ஒருமுறை ஏலம் விடப்பட்டு வரும் நிலையில், டெண்டர் முடிந்து ஒரு வருடங்களாகியும் இதுவரை ஏலம் விடப்படவில்லை.

பூ கட்டும் தொழிலாளர்கள் 20 சதுர அடியில் ஒரு நபர் அமர்ந்து பூ கட்ட முடியும். தற்போது, அங்கு 100 பேர் மட்டுமே அமர்ந்து பூ கட்டக் கூடிய சூழல் உள்ளருது. மீதம் உள்ளவர்களுக்கு இடம் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். ஒரு சிலர் மட்டுமே அந்த இடத்தை வாடகைக்கும், குத்தகைக்கும் எடுத்து, உள் வாடகைக்கு விட்டிருந்தவர்கள் முன் அறிவிப்பின்றி தங்களை காலி செய்ய சொல்லி நிர்பந்திப்பதால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது.

எனவே, மாவட்ட நிர்வாகம் இப்பிரச்சனையில் தலையிட்டு, உரிய நடவடிக்கை மேற்கொண்டு பூ கட்டுவோர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாத வகையில் அதே பகுதியில் இடம் ஒதுக்கி தர வேண்டும் அல்லது பூ கட்டுபவர்களுக்கு மாற்று இடம் வழங்கிட வேண்டும், இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...