பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருவர் கோவை மருத்துவமனையில் அனுமதி: தடுப்பு முறைகள் என்ன?

கோவை: கோவை அரசு மருத்துவமனையில் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஒரு பெண் உட்பட இருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது

கோவை: கோவை அரசு மருத்துவமனையில் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஒரு பெண் உட்பட இருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கோவையில் கடந்த ஆண்டு பன்றிக்காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகமாக இருந்தது. கடந்த சில மாதங்களாக அதன் தாக்கம் குறைந்த நிலையில் தற்போது மீண்டும் பன்றிக் காய்ச்சலின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கோவை அரசு மருத்துவமனையில் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மாநகர பகுதியைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவரும், 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

'இந்த காய்ச்சலில் இருந்து தப்புவது எப்படி?' என்பது குறித்து பொதுமக்களுக்கு கோவை அரசு மருத்துவர்கள் கூறியதாவது:- 

அரசு மருத்துவமனையில் தான் இந்த இன்ஃப்ளூயன்சா வைரஸ்க்கு எதிரான தடுப்பூசி உள்ளது. இதில் இருந்து பாதுகாக்க தினமும் கழிவறைக்கு சென்ற பின்பும், உணவு உண்ணும் முன்பும் கைகளை நன்றாக கழுவ வேண்டும்.

சளி இருமல் இருப்பவர்கள் இருமும் போதும் கைக்குட்டை கொண்டு வாயை மூடி இரும வேண்டும். வைரஸ் தொற்று பரவும் காலங்களில் கை கொடுப்பது, கட்டி அணைப்பது போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. குழந்தைகளுக்கு இதுபோன்ற சளி இருமல் இருக்கும் பட்சத்தில் அவர்களை பள்ளிக்கு அனுப்பாமல் வீட்டிலேயே தனியாக வைத்து பராமரிக்கலாம்.

பள்ளிக்கு அனுப்பினால் மற்ற குழந்தைகளுக்கும் பரவும் வாய்ப்புள்ளது. மேலும், பொதுமக்கள் தங்கள் வீட்டைச் சுற்றி உள்ள இடங்களைத் தூய்மையாக வைத்திருக்கவேண்டும். லேசான காய்ச்சல் வந்தால் கூட உடனே மருத்துவரை அணுகுவது நல்லது. இது போன்ற வழிமுறைகளை பின்பற்றி பன்றிக் காய்ச்சல் பரவாமல் தடுக்கலாம். பன்றிக் காய்ச்சலுக்கான சிகிச்சை தங்கள் அருகாமையில் இருக்கும் அரசு மருத்துவமனைகளில் கிடைக்கிறது. எனவே பொதுமக்கள் இந்த காய்ச்சல் குறித்து பீதி அடைய வேண்டாம்.

இவ்வாறு மருத்துவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...