பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் ஒப்பந்த தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்

சென்னை: தமிழ்நாடு மின்சார வாரியம் ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று சென்னையில் உள்ள மின்சார வாரியம் தலைமை அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.


சென்னை: தமிழ்நாடு மின்சார வாரியம் ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று சென்னையில் உள்ள மின்சார வாரியம் தலைமை அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

ஒப்பந்த தொழிலாளர்களுக்கு மின்வாரியத்தில் தொடர்ந்து பணிபுரியு ஒப்புதல் வழங்க வேண்டும், தொழிலாளர்களை அடையாளம் கண்டு அடையாள அட்டை வழங்கிட வேண்டும், ஒப்பந்த பணியாளர்களுக்கு அமைச்சர் அறிவித்த குறைந்தபட்ச ஊதியம் ரூ.380 வழங்கிட வேண்டும் போன்றவை இவர்களின் பிரதான கோரிக்கையாகும்.



இந்த போராட்டம் குறித்து அச்சங்கத்தின் மாநில தலைவர் ஆறுமுகம் கூறுகையில், "தமிழகம் முழுவதும் சுமார் 8 ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். ஆனால் 2008-ம் ஆண்டு முதல் எந்த ஒரு பணியும் ஒப்பந்த பணியாளர்களை கொண்டு செய்வதில்லை என அதிகாரிகள் அரசுக்கு தகவல் அனுப்புகின்றனர். இதனைக் கண்டித்தும் எங்களது கோரிக்கைகளை வலியுறுத்தியும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்."

கோவை மண்டல செயலாளர் நாகராஜ் கூறுகையில், "கடந்த 1998-ம் ஆண்டு முதல் இன்று வரை கோவை மண்டலத்திற்கு உட்பட்ட அனைத்து மின்வாரியப் பிரிவு அலுவலகங்களிலும் சுமார் 2 ஆயிரம் பேர் ஒப்பந்த தொழிலாளர்களாக மின் பணிகளை செய்து வருகிறோம். 



புயல், வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்கள் வந்தால் தமிழகம் முழுவதும் உள்ள 8 ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர்கள் மின் கம்பங்களை சீர் செய்வது என அனைத்து மின் பணிகளுக்கும் அனுப்பிவைக்கப்படுகிறார்கள். ஆனால், எங்களை அடையாளம் கண்டு பணி நிரந்தரம் செய்ய எந்த அதிகாரியும் முன்வருவது இல்லை." என்றார்.

Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...