உதகை மலை ரயில் சேவை மீண்டும் தொடங்கியது

நீலகிரி: கனமழை காரணமாக ரத்து செய்யப்பட்டிருந்த மேட்டுப்பாளையம்-உதகை மலை ரயில் சேவை மூன்று தினங்களுக்கு பிறகு மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

நீலகிரி: கனமழை காரணமாக ரத்து செய்யப்பட்டிருந்த மேட்டுப்பாளையம்-உதகை மலை ரயில் சேவை மூன்று தினங்களுக்கு பிறகு மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வழியே உதகைக்கு தினசரி காலை 7.10 மணிக்கு நீலகிரி மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது.



நூற்றாண்டு பழமை வாய்ந்த இம்மலை ரயிலில் பயணித்து நீலகிரி மலையின் இயற்கை எழிலைக் கண்டு ரசிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் முன்பதிவு செய்து காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் இம்மாதம் துவக்கம் முதலே மேட்டுப்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு நேரங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வந்தது. இதனால் கடந்த 6-ம் தேதி மேட்டுப்பாளையம் ரயில்நிலையத்தில் இருந்து வழக்கம் போல் சுற்றுலா பயணிகளோடு மலை ரயில் புறப்பட்டு சென்ற நிலையில் கல்லார் ரயில்நிலையம் முதல் ரன்னிமேடு ரயில்நிலையம் வரையிலான மலை ரயில் இருப்புப்பாதையில் பல இடங்களில் மண் சரிவுகள் ஏற்பட்டு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

இதனையடுத்து மலை ரயில் பயணம் பாதியில் நிறுத்தப்பட்டு பயணிகள் வேறு வாகனங்களில் அனுப்பி வைக்கப்பட்டதோடு அன்றைய தினம் நீலகிரிக்கான ரயில் சேவை ரத்தும் செய்யப்பட்டது.

தொடர்ந்து மழை பெய்து வந்த காரணத்தினாலும், நீலகிரி மலைப்பகுதிகளில் கனமழை நீடிக்கும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்த காரணத்தினாலும் 7, 8, மற்றும் 9 தேதிகளில் தொடர்ச்சியாக மூன்று நாட்கள் மலை ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டது.

இதன்படி தொடர்ச்சியாக மூன்று நாட்கள் ரத்து செய்யப்பட்டிருந்த மலை ரயில் இன்று மீண்டும் வழக்கம் போல் துவங்கியுள்ளது. நேற்று முதல் இப்பகுதிகளில் மழையின் தாக்கம் ஓரளவு குறைந்துள்ளதால் மூன்று நாட்களுக்குப் பின்னர் சுற்றுலாப் பயணிகளோடு மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகை நோக்கி நீலகிரி மலை ரயில் புறப்பட்டு சென்றது.

இதனால் மலை ரயிலில் பயணிக்க ஆர்வத்தோடு வந்திருந்த பயணிகள் பெரிதும் மகிழ்ச்சியடைந்தனர்.

Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...